Whatsapp new update PiP Mode : வாட்ஸ்ஆப் இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தது. புதிய அப்டேட்டினை எப்படி பெறுவது மற்றும் எப்படி செயல்படுத்து என்பது பற்றிய ஸ்டெப் - பை - ஸ்டெப் டீட்டைல்ஸ் கீழே.
Whatsapp new update PiP Mode - அப்டேட் எப்படி செய்வது ?
ஏற்கனவே ஆப்பிள் போன்களில் செயல்பட்டு வரும் இந்த வசதிகள் தற்போது கணினி வெர்சனிலும், ஆண்ட்ராய்ட் போன்களிலும் செயல்பட உள்ளது.
உங்களுடைய கணினியில் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் வெப் எந்த வெர்சன் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஏன் என்றால், இந்த புதிய அப்டேட் 0.3.1846 இந்த வெர்சனில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அப்டேட் செய்ய, வாட்ஸ்ஆப் வெப் சென்று, செட்டிங்க்ஸ்ஸை க்ளிக் செய்யவும், பின்னர் அங்கு ஹெல்ப் என்ற செக்சனை க்ளிக் செய்யவும். அங்கு வாட்ஸ்ஆப் வெப்பின் வெர்சன் தரப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க : இந்த வருடத்தின் most innovative smartphones
டெஸ்க்டாப் வெர்சனை செக் செய்த பின்பு, பயனாளிகள் இந்த அப்டேட்டினை பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்கு வரும் வீடியோ லிங்குகளை, மூன்றாவது இணையதளத்திற்கு சென்று (எ.கா யூடியூப், ஃபேஸ்புக்) பார்க்காமல் வாட்ஸ்ஆப் பக்கத்திலேயே நேரடியாக பார்த்துக் கொள்ளலாம். பகிரப்பட்ட லிங்குக்குகளை, கணினி திரையின் வலது பக்கம் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த வீடியோவினை ஃபார்வேர்ட், பேக்வர்ட் மற்றும் மியூட் செய்து கொள்ளும் வசதிகளும் இதில் உள்ளன. இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோடின் மூலம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்டீரிமபிள் தளங்களில் இருக்கும் வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் இந்த அப்டேட்டினை v2.18.830-ல் பெற்றுக் கொள்ளலாம். ஆப்பிள் போன்களில் இந்த அப்டேட் மார்ச் மாதமே வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : பிக்சர் - இன் - பிக்சர் மோட் : ஆண்ட்ராய்ட் போன்களில் எப்படி வேலை செய்கிறது ?