வாட்ஸ்அப்பில் தெரியாத எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனரின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்அப் தானாகவே ம்யூட் செய்யும். இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பை மேலும் தனிப்பட்டதாக்கும் மற்றும் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
Advertisment
இந்த அம்சம் பீட்டா சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் ப்ரைவசி செட்டிங்ஸ் மெனு மூலம் இதை எனேபிள் செய்யலாம்.
இதைப் பயன்படுத்த பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் தானாக ம்யூட் செய்யப்பட்டாலும் அந்த அழைப்பு குறித்த விவரம் உங்கள் கால் டேப் (Calls tab) மற்றும் நோட்டிவிக்கேஷனில் காண்பிக்கப்படும்.
எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்யவும். 2. அடுத்து செட்டிங்ஸ் மெனு பக்கம் சென்று, ப்ரைவசி என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். 3. அதில் "calls" ஆப்ஷன் செலக்ட் செய்து எனேபிள் “Silence Unknown Callers” கொடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“