வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. உலக முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் வெளியிடும் புது அப்டேட்களில் தனியுரிமை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது பயனர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
அந்தப் பட்டியலில் தற்போது மேலும் ஒரு அப்டேட் குறித்த விவரங்களை WABeta Info வெளியிட்டுள்ளது. இந்த வசதியை முதலில் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஸ்டோரி அம்சம் போன்று மாற்றப்பட்டு, பயனர்கள் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். 24 மணிநேரத்தில் மறைந்து போகும்படி உள்ளது. பயனர்கள் ஸ்டேட்டஸ் டாப் சென்று மற்றவர்களுடைய ஸ்டேட்டஸை பார்த்து வந்தனர்.
ஆனால் தற்போது இந்த புது அப்டேட் மூலம் மற்றவர்கள் பதிவிடும் ஸ்டேட்டஸை உங்கள் சாட் லிஸ்ட்டிலிருந்தே பார்க்கும்படி கொண்டு வரப்பட உள்ளது. அதாவது profile pictureயை tap செய்தால் அவர்கள் பதிவிட்ட ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்க முடியும். கிட்டத்தட்ட இன்ஸ்டாவில் உள்ளது போல் இந்த அம்சம் மாற்றயமைக்கப்பட உள்ளது.
தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அண்மையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது. undo delete messaage வசதி,
கணினி, லேப்டாப்பிற்கு நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் வசதி, நோட்டிபிகேஷன் கொடுக்காமல் குரூப்பிலிருந்து வெளியேறுவது, ‘View once’ மெசேஜை ஸ்கிரின்சாட் எடுக்க முடியாது, online status காண்பிப்பதை நிர்வகிப்பது போன்றவற்றை அறிமுகப்படுத்தியது.