இந்த வருடம் வாட்ஸ்ஆப்பில் வரப்போகும் மிக முக்கியமான அப்டேட்கள் இவை தான்

ஜிபோர்டுடன் கூடிய ஸ்டிக்கர் இண்டெக்ரேசனுக்காக வாடிக்கையாளர்கள் வெய்ட்டிங்.

WhatsApp New Updates 2019 : கடந்த வருடம், ஸ்டிக்கர்கள், ஃபார்வர்ட் லேபிள்கள், க்ரூப் கால்கள், க்ரூப் வீடியோ கால்கள் என அசத்தல் அப்டேட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு தந்தது வாட்ஸ்ஆப் நிறுவனம். அதனால் தான் இந்த வருடம் புதிய புதிய அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே பிங்கர்பிரிண்ட் லாக் பற்றிய அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. ஆனால் தற்போது புதிதாக என்ன அப்டேட்டுகள் வரப்போகின்றன என்பதை விவரிக்கின்றது இந்த கட்டுரை.

Fingerprint Lock feature – WhatsApp New Updates 2019

நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், உரையாடல்கள் ஆகியவையை காக்கும் பெட்டகமாகவே செயல்பட்டு வருகிறது வாட்ஸ்ஆப். நம்முடைய உரையாடல்களை மற்றவர்கள் படித்துவிடக் கூடாது என்பதில் நாம் உஷாராகவே இருப்போம்.

இருப்பினும், அதற்கான பாதுகாப்புகளை வாட்ஸ்ஆப் இது வரை உறுதி செய்ததில்லை. வேண்டும் என்றால், கூகுள் ப்ளே ஸ்டோரில் லாக்கர்கள் போன்ற அப்ளிகேஷனை வாங்கி தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வந்துள்ளது இந்த புதிய அப்டேட். மிக விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Audio picker

இந்த ஆடியோ பிக்கர் அப்டேட் வந்துவிட்டால், ஒரே நேரத்தில் சுமார் 30 ஆடியோ ஃபைல்களை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம். தற்போது பீட்டா வெர்ஷனில் ( 2.19.1.) இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. மிக விரைவில் அனைவரின் பயன்பாட்டிற்கும் வெளிவரும் என அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப்.

WhatsApp sticker integration

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர் ஏற்கனவே வாட்ஸ்ஆப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஜிபோர்டுடன் கூடிய ஸ்டிக்கர் இண்டெக்ரேசனுக்காக வாடிக்கையாளர்கள் வெய்ட்டிங்.

Dark Mode for WhatsApp

வெகுநாட்களாக இதோ வருகின்றேன் அதோ வருகின்றேன் என்று ஏமாற்றிக் கொண்டிருந்த டார்க் மோட் தற்போது அண்டெர் டெவலப்மெண்ட்டில் இருப்பதை உறுதி செய்துள்ளது வாட்ஸ்ஆப்.

3D Touch to check WhatsApp status

ஆப்பிள் ஐபோனில் இருக்கும் 3டி டச்சினை பயன்படுத்தி ஸ்டேட்டஸின் ரீட் ரெசிப்டினை அனுப்பாமல் ஸ்டேட்டஸ்களை பார்த்துக் கொள்ளலாம். ஐபோனில் மட்டும் தான் இந்த வசதி உள்ளது. ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் தான் வர அதிக நாட்கள் பிடிக்கும்.

மேலும் படிக்க : ஃபிங்கர் பிரிண்ட் இல்லாமல் இனி வாட்ஸ்ஆப் சாட் பார்க்க இயலாது

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close