வாடிக்கையாளர்களின் ப்ரைவசி விசயத்தில் வாட்ஸ்ஆப் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் தான்... இனிமேல் ப்ரோஃபைல் பிக்சர் டவுன்லோடு கிடையாது!

Whatsapp Profile Picture : இனிமேல் ப்ரோபைல் பிக்சரை டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன.

WhatsApp new updates :  உலகம் முழுவதும் உள்ள 1.5 பில்லியன் மக்கள் தற்போது வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய புதிய அப்டேட்டுகளை அள்ளி வழங்கும் வாட்ஸ்ஆப்பின் லேட்டஸ்ட் அப்டேட்கள் என்ன?

WhatsApp new updates

க்ரூப் இன்விடேசன் (Group invitation)

புதிதாக வந்திருக்கும் இந்த ப்ரைவசி செட்டிங்கில் உங்களின் விருப்பம் இன்றி ஒரு க்ரூப்பில் உங்களை சேர்க்க இயலாது. ப்ரைவசி மெனுவில் இருக்கும் இதற்கான செட்டிங்கில் நோபடி, எவ்ரி ஒன், அல்லது மை காண்டாக்டில் உங்களின் விருப்பம் எதுவோ அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ‘நோபடி’ என்பதை தேர்வு செய்திருந்தால், க்ரூப்பில் இணைவதற்கு உங்களுக்கு இன்விட்டேசன் அனுப்பப்படும். பீட்டா வெர்ஷனில் மட்டுமே இந்த வசதிகள் உள்ளது.

ஃபார்வர்ட் (Forwarding info)

வதந்தி செய்திகள் பரவலை தடுப்பதற்கு பயனுள்ளதாக 2018ல் புதிய மாற்றங்களை உருவாக்கியது. ஃபார்வர்ட் டேக்கில் புதிய மெசேஜ்கள் ரீசிவ் ஆகும். அனுப்பப்படும் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய புதிதாக ஃபார்வர்டிங் இன்ஃபோ அப்டேட் ஆகியுள்ளது. அதன் மூலம் உங்களுக்கு வந்திருக்கும் மெசேஜ் எத்தனை முறை ஃபார்வர்ட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்,

ஸ்டேஸில் கொஞ்சம் மாற்றம் (Algorithm-based Status tab)

தற்போது ஸ்டேட்டஸ் அனைவருக்கும் அல்லது குறிப்பிட்ட நபர்கள் பார்க்கும் படி வைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. புதிய அப்டேட்டில் அல்காரிதம் அடிப்படையில், நீங்கள் யாருடன் அதிகமாக வாட்ஸ்ஆப் தொடர்பாடலில் இருக்கின்றீர்களோ அவர்களுக்கு தான் முதலில் ஸ்டேட்டஸ் அப்பியர் ஆகும்.

ப்ரொஃபைல் பிக்சர்

ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷனில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் ப்ரோபைல் பிக்சரை டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன.

மேலும் படிக்க : மீண்டும் தாமதமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டின் அறிமுகம்… எப்போது தான் விற்பனைக்கு வரும்?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close