Advertisment

வாட்ஸ் ஆப் புதிய வசதி: நண்பர்களுடன் உரையாட சூப்பர் தளம்

Whatsapp new feature : வாட்ஸ் ஆப் தனது ஆப்பில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஒரு புதிய அம்சம் Messenger Rooms. முகநூலில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Messenger Rooms அம்சத்தை பயனர்கள் நேரடியாக வாட்ஸ் ஆப்பில் இருந்து பயன்படுத்த இது உதவும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp, new whatsapp feature, whatsapp messenger rooms support, messenger rooms, how to use messenger rooms, messenger rooms vs zoom, messenger rooms vs google meet, whatsapp update, whatsapp news, whatsapp news in tamil, whatsapp latest news, whatsapp latest news in tamil

whatsapp, new whatsapp feature, whatsapp messenger rooms support, messenger rooms, how to use messenger rooms, messenger rooms vs zoom, messenger rooms vs google meet, whatsapp update, whatsapp news, whatsapp news in tamil, whatsapp latest news, whatsapp latest news in tamil

பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக கடந்த பல மாதங்களில் வாட்ஸ் ஆப் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் ஆப் தனது ஆப்பில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஒரு புதிய அம்சம் Messenger Rooms. முகநூலில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Messenger Rooms அம்சத்தை பயனர்கள் நேரடியாக வாட்ஸ் ஆப்பில் இருந்து பயன்படுத்த இது உதவும். Zoom, Google Meet, Skype போன்ற பிரபலமான வீடியோ கான்பரன்சிங் தளங்களுக்கு போட்டியாக முகநூல், Messenger Rooms என்ற அம்சத்தை சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

Advertisment

Messenger Rooms அம்சம் இப்போது அனைவருக்கும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கிறது. தடையற்ற அனுபவத்திற்காக Messenger Rooms விருப்ப தேர்வு வாட்ஸ் ஆப்பிலும் கிடைக்கும் என முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் முகநூலில் பயனர்கள் நேரடியாக நண்பர்களுடன் group calls களை செய்யலாம். இந்த விருப்ப தேர்வு சில பயனர்களுக்கு ஏற்கனவே கிடைக்கிறது மேலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் ஆப் Messenger Rooms எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

WABetaInfo விலிருந்து வரும் தகவல்களின் படி, இந்த அம்சம் வாட்ஸ் ஆப் மெசஞ்சர் iOS 1.20.52.6 பீட்டா பதிப்போடு வருகிறது. சமீபத்திய பதிப்பில் உள்ள சில iOS beta பயனர்கள் WhatsApp Messenger Rooms Shortcut ஐ பெற்றுள்ளனர். இந்த shortcut சில நாடுகளில் மட்டும்தான் தற்போதைக்கு கிடைக்கிறது. WhatsApp Messenger Rooms shortcut, “attachment picker” ல் கிடைக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ லைப்ரரி, டாக்குமெண்ட், location, contact options ஆகியவற்றுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. ‘Room’ என்ற ஒரு தனிப்பட்ட விருப்ப தேர்வு இருக்கும். துவங்குவதற்கு வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒரு அரட்டையை (chat) திறந்து ‘Room’ option ஐ சொடுக்கவும். Room shortcut ஐ தட்டியப்பிறகு, வாட்ஸ் ஆப், அம்சத்தை அறிமுகப்படுத்த ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வழங்கும். பயனர்கள் அடுத்து Messenger option ல் உள்ள continue என்பதை சொடுக்கி நண்பர்களை சேர்த்து ஒரு group video call ஐ ஆரம்பிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment