Advertisment

வாட்ஸ் அப்: புதிய போனில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு சுலபத் தீர்வு

Whatsapp chat transfer: பழைய கைபேசியில் உள்ள தகவல்கள் மற்றும் அரட்டைகளை எவ்வாறு புதிய கைபேசியில் மாற்றுவது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp chat history backup, வாட்ஸ் அப் சாட்ஸ், whatsapp chat transfer, whatsapp chat transfer android, whatsapp chat transfer iphone, icloud, google drive, iphone to android chat transfer

whatsapp news in tamil whatsapp new update whatsapp chat transfer- வாட்ஸ் அப் சாட்ஸ்

WhatsApp tips: ஒரு நபர் புதிய ஸ்மார்ட் கைபேசி வாங்கிய உடன் எதிர்கொள்கிற முதல் பிரச்சனை, தனது பழைய கைபேசியில் உள்ள தகவல்கள் மற்றும் அரட்டைகளை எவ்வாறு புதிய கைபேசியில் மாற்றுவது என்பதுதான். வாட்ஸ் ஆப் (WhatsApp) மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு செய்தியிடல் தளம் மேலும் நண்பர்கள் மற்றும் நமது தொடர்பில் உள்ள நபர்களிடம் தொடர்பு கொள்வதற்கும் இது தேவைப்படுகிறது. எனவே எளிதாக உங்கள் வாட்ஸ் ஆப் அரட்டைகளை பழைய கைபேசியிலிருந்து புதிய கைபேசிக்கு மாற்றுவதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

Advertisment

Google Drive அல்லது iCloud’ல் Backup செய்து restore செய்துக் கொள்ளவும்

ஒரே operating systems ஆக இருக்கும் பட்சத்தில், உங்கள் வாட்ஸ் ஆப் அரட்டை வரலாறுகளை (WhatsApp chat history) ஒரு கைபேசியிலிருந்து மற்றொரு கைபேசிக்கு மாற்ற எளிதான வழி இதுவாகும்.

டிக்-டாக்கிற்கு மாற்றாக வரும் புதுவரவுகள்! நிதானமாக களமாட நினைக்கும் ”ப்ராண்ட்கள்”

Whatsapp chat transfer-வாட்ஸ் அப் சாட்ஸ்-களை மாற்றுவது எப்படி?

ஆண்ட்ராய்ட் (Android)

# உங்கள் பழைய கைபேசியில் ஆண்ட்ராய்டை திறந்து மேல் வலதுபக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும். settings மேனுவை திறந்து Chats க்கு சென்று Chats backup ஐ தேர்வு செய்யவும்.

# இங்கு உங்கள் chats களை manual ஆக அல்லது தானாக (automatically) எப்படி backup செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் புதிய கைபேசியில் வாட்ஸ் ஆப்பை திறக்கும் போது அது உங்கள் பழைய chats, media ஆகியவற்றை Google Drive லிருந்து மீட்டு எடுக்க தூண்டும்.

# chats, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனடியாக உங்கள் ஸ்மார்ட் கைபேசியில் தெரியும்.

iPhone

# iOS’ல் வாட்ஸ் ஆப் settings க்கு செல்வதற்கு முன்பு நீங்கள் உங்கள் Apple ID க்கு சென்று iCloud ஐ turn on செய்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இதை ஏற்கனவே செய்துவிட்டால் திரும்ப செய்ய தேவையில்லை.

# வாட்ஸ் ஆப்பை திறந்து கீழ் வலது பக்க மூலையில் உள்ள Settings ஐ தட்டவும். Chats க்கு சென்று ‘Chat Backup’ ஐ சொடுக்கவும். உங்கள் chats history’ஐ manual ஆக அல்லது தானாக (automatically) எப்படி backup செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். Backup history’ல் வீடியோக்களை சேர்க்க வேண்டுமா இல்லை தவிர்க்க வேண்டுமா என்பதை தேர்வு செய்யவும் ஒரு ஆப்ஷன் உள்ளது.

# உங்கள் புதிய iPhone கைபேசியில் வாட்ஸ் ஆப்பை நிறுவும் போது iCloud லிருந்து chat history மீட்டு எடுக்க தூண்டும்.

Manual backup (Android)

இது Google Drive updateஐ பெறாதவர்கள் மற்றும் தங்களது chat historyஐ ஆன்லைனில் சேமிக்க விரும்பாதவர்களுக்கான ஆப்ஷன்.

# உங்கள் ஸ்மார்ட் கைபேசியை USB cable மூலமாக கணினி அல்லது மடிக் கணினியில் இணைத்துக் கொள்ளவும். கைபேசியின் internal memory ல் உள்ள WhatsApp database க்கு செல்லவும்.

# backup files ஐ தேடி (அந்த files இப்படிதான் இருக்கும் “msgstore-2020-07-10.db.crypt1”.) அதை கணினியில் காபி செய்து கொள்ளவும்.

குறைந்த விலையிலும் பெஸ்ட் போன் எது? Redmi 9, Redmi 9A பற்றி அலசல்

# வாட்ஸ் ஆப்பை உங்கள் புதிய கைபேசியில் நிறுவுவதற்கு முன்பு மீட்டெடுத்த backup files ஐ உங்கள் புதிய கைபேசியின் databases’ folder ல் காபி செய்துக் கொள்ள வேண்டும்.

# வாட்ஸ் ஆப்பை திறக்கும் போது இந்த ஆப் ஒரு message backup உள்ளதாக ஒரு அறிவிப்பை காண்பிக்கும். நீங்கள் ‘restore’ ஆப்ஷனை தட்ட வேண்டும். இப்போது பழைய chats உடனடியாக தெரிய தொடங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment