/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-07T131555.653.jpg)
Whatsapp News In Tamil
Whatsapp News In Tamil, Whatsapp Google Search: சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளில் பெரும்பலானவைகள் உண்மைக்கு புறம்பான தகவல்களே இருப்பதால், சமூகவலைதளங்களின் மீதான நம்பிக்கை பெருமளவு குறைந்துவிட்டது என்றே கூறவேண்டும். இந்நிலையில், வாட்ஸ்அப் மூலமும் அதிகளவில் பொய்ச்செய்திகள் பரவும் நிலையில், வாட்ஸ்அப் நிர்வாகம், இதுகுறித்த முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில், புதிதாக ‘Search the Web’ ஆப்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்சப் பார்வர்ட் மெசேஜ்களை. நாம் ஒரு கிளிக்கிலேயே செய்தியின் நம்பகத்தன்மை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சேவை, இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்ஸிகோ, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அப்டேடட் வெர்சன்களில் இந்த வசதி, ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்களில் மட்டுமல்லாது வாட்ஸ்அப் வெப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நமக்கு வரும் பார்வர்ட் மெசேஜ்கள், நாம் அனுப்பும் மெசேஜ்கள் உள்ளிட்டவைகளை இந்த பிரவுசரின் உதவியுடன் அதன் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ளலாம். வாட்சப்பில் பதிவேற்றப்படும் தகவல்கள், கூகுள் சர்ச்சில் உள்ள செய்திகளுடன் ஒப்பிடப்பட்டு அதன் நம்பகத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது.
நமக்கு வந்துள்ள மெசேஜ்களை. சாட் பகுதியில் உள்ள மேக்னிபையிங் கிளாஸ் உதவியுடன்,. நாம் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளலாம் என்று வாட்ஸ்அப், தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியினால் தான் அதிகளவில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், வாட்ஸ்அப், இதற்கு முன்னதாக, ஒரு மாற்றத்தை செய்தது. ஆனால், அது மெசேஜ் பெறுபவருக்கு தெரியாதநிலையே இருந்துவந்தது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றத்தின் மூலம், தங்கள் மேலுள்ள குற்றச்சாட்டுகள் களையப்படும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.