/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-03T155126.768.jpg)
whatsapp web dark mode, whatsapp web tricks, whatsapp web tips, whatsapp web tips and tricks, வாட்ஸ் ஆப், வாட்ஸ் ஆப் வெப், டார்க் தீம்
Whatsapp News In Tamil: WhatsApp Web மற்றும் desktop app ல் Dark Theme’ அம்சத்தை வாட்ஸ் ஆப் (WhatsApp) இறுதியாக அறிவித்துள்ளது. இந்த அம்சம் தற்போது வரை கைபேசி ஆப்பில் மட்டும் தான் கிடைத்து வந்தது.
Dark theme உடன் கூடுதலாக Animated Stickers, QR codes போன்ற சில புதிய அம்சங்களும் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
WhatsApp Web ல் டார்க் மோட்’ஐ எவ்வாறு enable செய்வது என்பது பற்றி பார்க்கலாம். இதற்கான செயல்முறை எளிதானது.
Dark Mode theme’ஐ எவ்வாறு WhatsApp Web’ல் enable செய்வது.
* Google Play Store அல்லது Apple App Store மூலமாக உங்கள் WhatsApp கைபேசி ஆப்பை அப்டேட் செய்துக் கொள்ளவும்.
* web.whatsapp.com அல்லது உங்கள் WhatsApp desktop app ஐ திறந்து கொள்ளவும்.
* உங்கள் WhatsApp கணக்கை WhatsApp Web QR code மூலமாக சரிப்பார்த்துக் கொள்ளவும்.
* உங்களுடைய எல்லா தொடர்புகளும் (contacts) காண்பிக்கப்படும் இடது window வின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை சொடுக்கவும்.
* ‘Settings’ ஆப்ஷனை தட்டவும்
* அதிலிருந்து ‘Theme’ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* Dark Mode ஐ enable செய்வதற்கு, இந்த புதிய ஆப்ஷன் விண்டோவில் Dark என்பதை தட்டவும்
ஆண்ட்ராய்டில் (Android) எப்படி Dark Mode theme’ஐ enable செய்வது
* WhatsApp ஐ திறந்து மேல் வலதுபக்க மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.
* Settings ஆப்ஷனை தட்டவும்.
* ‘Chats’ ஆப்ஷனை திறக்கவும்.
* ‘Theme’ ஆப்ஷனை தட்டவும்.
* Enable Dark mode.
iOS’ல் Dark Mode theme’ஐ எவ்வாறு enable செய்வது ?
* Settings panel ஐ திறக்கவும்.
* ‘Display & Brightness’ ஆப்ஷனை தட்டவும்.
* system-wide dark mode’ஐ enable செய்வதற்கு Dark ஆப்ஷனை தட்டவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.