Advertisment

வாட்ஸ்அப்பில் வந்தாச்சு சூப்பர் அப்டேட்: இதை நோட் பண்ணுங்க

வாட்ஸ்அப் குரூப், தனி நபர் ஷேட் பக்கத்தில் இப்போது 3 மெசேஜ்களை பின் செய்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
pin msg.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் பக்கத்தில் கூடுதலான ஷேட், மெசேஜ்களை பின் செய்யும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமல்லாமல் மீடியா, வாய்ஸ் மெசேஜ், இமோஜி போன்றவற்றையும் பின் செய்து கொள்ள முடியும் என்றும் இந்த வசதி குரூப், தனி நபர் ஷேட் இரண்டிலும் செய்து கொள்ளலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ்அப்பில் தற்போது வரை அதிகபட்சமாக 3 ஷேட், ஒரு  மெசேஜ் மட்டுமே பின் செய்ய முடியும். ஆனால் புதிய அப்டேட்டில் முதன்மை பக்கத்தில் 5 ஷேட், 3 மெசேஜ்களை பின் செய்து கொள்ளலாம். மெசேஜ் பின் செய்யும் அம்சம் தனிநபர் ஷேட் பக்கம் அல்லது குரூப் பக்கத்தின் மேலே காண்பிக்கப்படும். 24 மணி நேரம், 7 நாட்கள், 30 நாட்கள் வரை இந்த செமேஜை பின் செய்யலாம். Default-ஆக மெட்டா 7 நாட்கள் வரை மெசேஜ் பின் செய்து வைத்திருக்கும். 

WhatsApp-pin-message.webp

வாட்ஸ்அப் மெசேஜ் பின் செய்வது எப்படி? 

வாட்ஸ்அப் மெசேஜ் பின் வசதி  ஒருவருடைய ஷேட்  மெசேஜின் டாப்-ல் பின் செய்யப்படும்.  முக்கியமான ஒரு மெசேஜை long-press செய்து பின் செய்யலாம். அதிகபட்சமாக 30 நாட்கள் வரை ஷேட்டில் பின் செய்து வைக்க முடியும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment