வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தும் பிரபலமான செயலியாக உள்ளது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பயனர்களை ஈர்த்துள்ளது. காரணம், இது மிகவும் எளிதாக பயன்படுத்த கூடிய ஒன்றாக (user friendly) உள்ளது. தகவல்களை எளிய முறையில் மற்றவர்களுக்கு அனுப்பும்படியாக உள்ளது. அதனால், இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் உள்ளவர்களும், வெளிநாட்டில் உள்ளவர்களும் எளிதில் மற்றவர்களை தொடர்பு கொண்டு பேசமுடிகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை ஈர்க்க பல்வேறு வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி மகிழ்ச்சிபடுத்துகிறது. வாட்ஸ்அப் அண்ட்ராய்டு, ஐபோன் என எவ்வித போனிலும் பயன்படுத்த முடிகிறது.
குரூப் சாட், இமோஜி, ஸ்டிக்கர் எனப் பல அம்சங்கள் பயனர்களை கவர்ந்துள்ளது. அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அனுப்பிய தகவலை டெலிட் செய்யும் அம்சத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதாவது முன்பு ஒரு தகவலை நீங்கள் குரூப் சாட் அல்லது தனி நபருக்கு அனுப்பினால், அதை பின்பு டெலிட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இருவருக்கும் சேர்த்து டெலிட் செய்து கொள்ளலாம்.
புது அப்டேட்
Delete for everyone, Delete for me என்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Delete for everyone (அனைவருக்கும் டெலிட் செய்ய வேண்டும்) என்று செலக்ட் செய்தால், அந்த தகவல் யாருக்கும் காண்பிக்கப்படாது, தனி நபர் அல்லது குரூப் சாட்டிலிருந்து அழிந்து விடும்.
Delete for me கொடுத்தால் உங்கள் சாட்டில் மட்டும் அந்த தகவல் நீக்கிவிடும். இந்த வசதி Delete for everyone வசதி, நீங்கள் தகவல் அனுப்பியதிலிருந்து 1 மணி நேரம் மட்டும் பயன்படுத்த முடியும். அதன் பின் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியாது. அந்த தகவல் அப்படியே இருக்கும். தவறுதலாக ஏதேனும் செய்தி, தகவலை அனுப்பினால், அல்லது போட்டோ அனுப்பினால் பின்பு டெலிட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில், மெசேஜ், தகவல், போட்டோ ஏதேனும் டெலிட் செய்ய நினைத்தால் இனி 2 நாட்கள் வரை டெலிட் செய்யலாம். அதாவது முன்பு 1 மணி நேரம் என இருந்தது இப்போது 2 நாட்களாக நீட்டித்து வழங்கப்படுகிறது. ஒரு தகவலை, மெசேஜை குரூப் அல்லது தனிநபருக்கு அனுப்பியதை டெலிட் செய்ய நினைத்தால் 2 நாட்கள் வரை வைத்து டெலிட் செய்யலாம். இந்த புது அப்டேட் உடனடியாக பயனர்களின் பயன்பாட்டுக்கு வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுங்கள்
கடந்த 1 மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வந்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வசதி சமீபத்திய வெர்ஷனில் மட்டும் செயல்படும் என தெரிவித்துள்ளது. அதற்கு உங்கள் வாட்ஸ்அப்பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் அப்டேட் செய்ய கூகுள் பிளே ஸ்டோர் செல்ல வேண்டும். அங்கு வாட்ஸ்அப் எனக் குறிப்பிட்டு தேடி பின் அப்டேட் செய்து கொள்ளலாம். மாறாக, கூகுள் பிளே ஸ்டோர் வாட்ஸ்அப்பில் அப்டேட் ‘Update’ button வரவில்லை என்றால் கவலை வேண்டாம், உங்கள் வாட்ஸ்அப் அப்டேட் ஆகிவிட்டது என்று அர்த்தம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.