Why Whatsapp now using status updates Tamil News : இந்தியப் பயனர்களை மேலும் ஈர்க்கும் வகையில் வாட்ஸ்அப் இப்போது அதன் ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை ஜனவரி மாதம் இந்தியாவில் நேரடிமாக்கிய பின்னர் தனியுரிமை மீதான அதன் உறுதிப்பாட்டைப் பயனர்களுக்குத் தெரிவிக்க இந்த சேவை ஊடகத்தைப் பயன்படுத்துகிறது.
“உங்கள் தனியுரிமைக்கான எங்கள் உறுதிப்பாடு எதுவும் புதிதல்ல" என்று ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் புதுப்பிப்புகளில் ஒன்று குறிப்பிடுகிறது. மற்றொன்று, “வாட்ஸ்அப் உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை end-to-end குறியாக்கம் செய்யும்போது அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது” என்று கூறுகிறது.
புதிய கொள்கை குறித்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக், சமீபத்தில் எடுத்து வரும் குழுவின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த செய்திகள் உள்ளன. இந்த கொள்கை, பயனர்கள் பிப்ரவரி 8-ம் தேதிக்கும் முன் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது அல்லது வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இருப்பினும், இது இப்போது மே 15-ம் தேதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"எங்கள் சமீபத்திய புதுப்பிப்பில் எவ்வளவு குழப்பம் உள்ளது என்பதை நாங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஏராளமான தவறான தகவல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும், எங்கள் கொள்கைகளையும் உண்மைகளையும் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவ நாங்கள் விரும்புகிறோம்” என்று கடந்த மாதம் ஒரு வலைப்பதிவு போஸ்ட்டில் வாட்ஸ்அப் குறிப்பிட்டிருந்தது.
ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கொள்கை குறித்த குழப்பம் குறித்துப் பேசினார். "நாங்கள் கண்ட சில குழப்பங்களைத் தெளிவுபடுத்துகிறோம். இந்த புதுப்பிப்பு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் யாருடைய செய்திகளின் தனியுரிமையையும் மாற்றாது" என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.
“இந்தச் செய்திகள் அனைத்தும் end-to-end encrypted-ஆனது. அதாவது நீங்கள் சொல்வதை எங்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாது. மேலும், நீங்கள் செய்தி அனுப்பிய நபர் அதைப் பகிரத் தேர்வுசெய்யும் வரை நாங்கள் ஒருபோதும் தலையிட மாட்டோம். வணிகத்தைத் தேர்வுசெய்தால் மட்டுமே வணிகச் செய்திகள் எங்கள் உள்கட்டமைப்பில் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.
டெலிகிராம், சிக்னல் தொடர்ந்து பலன்களைப் பெறுகின்றன
வாட்ஸ்அப்பின் சிக்கல்களுக்கு மத்தியில், பிரபலமான உடனடி செய்தி பயன்பாடுகள் சிக்னல் மற்றும் டெலிகிராம் தொடர்ந்து வலிமையிலும் பிரபலத்திலும் வளர்ந்து வருகின்றன. ஏராளமான சிறப்பு அம்சங்கள் நிரம்பிய டெலிகிராம் சமீபத்தில் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் வரலாற்றை டெலிகிராமில் கொண்டு வர அனுமதிக்கும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது. சிக்னல், சமீபத்தில் தனிப்பயன் சாட் வால்பேப்பர்கள் உள்ளிட்ட புதிய தனிப்பயனாக்குதல் அம்சங்களைச் சேர்த்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.