நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆண்ட்ராய்டு போன் அம்சங்கள் போல் ஐபோன் இருக்காது. ஐபோன் அம்சங்கள் போல் ஆண்ட்ராய்டு இருக்காது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆண்ட்ராய்டில் உள்ள அம்சங்கள் ஐபோன் வாட்ஸ்அப்பில் இல்லை. இந்நிலையில் தற்போது ஐபோன் வாட்ஸ்அப்பில் வீடியோ கால்களுக்கான picture in picture mode ஆப்ஷன் அம்சம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
picture in picture mode ஆப்ஷன் என்பது ஆப்பிளின் ஃபேஸ்டைம் செயல் முறையைப் போன்றது. மேலும் வீடியோ கால் பேசும் போது வீடியோ நிற்காமல் அப்படியே மற்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டில் முன்பே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் ஐபோனில் தற்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு ஐபோன் வீடியோ கால் வசதி பயன்படுத்தும் போது மற்ற ஆப்கள் பயன்படுத்த முடியாது. அப்படி செய்தால் வாட்ஸ்அப் வீடியோ கால் pause ஆகிவிடும்.
இந்நிலையில் தற்போது ஐபோனில் picture in picture mode வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் ஐபோன் பயனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப் அப்டேட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/