பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், தனது ஐஓஎஸ் பயனாளர்களுக்கு வாய்ஸ் மெசேஜில் பாஸ் செய்து, மீண்டும் ரெக்கார்ட் செய்யும் வசதியை அடுத்த வெர்ஷனில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது, முந்தைய அப்டேட்டின் தொடர்ச்சியாகும். பழைய அப்டேட்டில், வாய்ஸ் மெசேஜ்ஜை அனுப்பவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கேட்கும் வசதியை வழங்கியிருந்தது.
இந்த புதிய வாய்ஸ் மெசேஜ் பாஸ் செய்யும் வசதி 22.2.75 பதிப்பில் வெளியிடப்படவுள்ளது. வாய்ஸ் ரெகார்டிங் ஸ்வைப் செய்கையில், பாஸ் மற்றும் ரேசியூம் பட்டன் திரையில் தோன்றும். ஸ்டாப் ரெகார்டிங் பட்டன் இடம்பெறவில்லை.
WABetaInfo தகவலின்படி, இந்த அப்டேட் அக்டோபர் 2021 டெஸ்ட் செய்யப்பட்டது. விரைவில், ஆண்ட்ராய்டு தளங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, வாட்ஸ்அப் நிறுவனம் ஐஓஎஸ் 15 பயனாளிகளுக்கு ஃபோகஸ் மோட் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம், DND (தொந்தரவு செய்ய வேண்டாம்) பயன்பாட்டில் இருக்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மெசேஜ்களை மட்டுமே வர அனுமதிக்கும்.
முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், iOSக்கான WhatsApp பீட்டாவில் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு சாட்களை மாற்றுவதற்கான வசதியை அனுமதிக்கிறது. WABetaInfo ஸ்கிரீன்ஷாட்படி, சாட்களை ஒருமுறை மட்டும் மாற்றிட முடியும். அதற்கு, பயனாளர்கள் ‘Move to iOS’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil