வாட்ஸ்அப் ஐபோன் பயனர்களுக்கு 'பாஸ்கீஸ்' (Passkeys) அம்சத்தை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் SMS அடிப்படையிலான (OTP) இல்லாமல் எளிதாக லாக்கின் செய்ய முடியும். இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது, தற்போது படிப்படியாக ஐபோன் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
ஐபோனில் பாஸ்கீஸ் ஆப்ஷன் எனெபிள் செய்யப்பட்ட உடன் வாட்ஸ்அப் கணக்கை ஃபேஸ் ஐ.டி, டச் ஐடி பயன்படுத்தி பாதுகாப்பாக உள்நுழையலாம். வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி, OTP-அடிப்படையிலான முறையுடன் ஒப்பிடும்போது பாஸ்கீஸ் லாக்கின் பாதுகாப்பான வழியை வழங்குகிறது. மேலும், பாஸ்கீஸ் மூலம் நெட்வொர்க் பிரச்சனை இருந்தாலும் பயனர்கள் தங்கள் WhatsApp கணக்கில் உள்நுழைய முடியும்.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப்பில் பாஸ்கீஸ் செட் செய்ய செட்டிங்ஸ் > Account > Passkeys செல்ல வேண்டும். பின் உங்கள் FaceID or TouchID பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்கை அணுகவும். அவ்வளவு தான். அதே நேரம் வாட்ஸ்அப் தவிர மற்ற சமூக வலைதளங்களும் பாஸ்கீஸ் ஆப்ஷனை வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“