பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், பேமண்ட் சேவையை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மற்ற யுபிஐ அடிப்படையிலான பேமண்ட் சர்வீஸான கூகுள் பே, பேடிஎம்,போன்பே போன்ற செயலிகள் அளவு பிரபலமடையவில்லை.
இதையடுத்து, கூகுள் பே ஆரம்ப காலத்தில் உபயோகித்த பழைய ட்ரிக்கான கேஷ்பேக் யுக்தியை கையில் எடுத்துள்ளது.
வாட்ஸ்அப் பே வாயிலாக மூன்று முறை பணம் அனுப்பினாலோ அல்லது பணம் வந்தாலோ, 11 ரூபாய் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. குறைந்தப்பட்ச தொகை எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், மூன்று முறை கேஷ்பேக் பெற, வெவ்வேறு பயனர்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் கேஷ்பேக் கிடைப்பதற்கான தகுதி விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதில், பயனர்கள் செயலி வாயிலாக மற்றொரு பயனருக்கு பணம் அனுப்பும் பிராசஸின் போது, ப்ரோமஷன் பேனர் அல்லது கிப்ட் ஐகானை திரையில் பார்த்திருக்க வேண்டும். அவர்கள் வாட்ஸ்அப் செயலியை குறைந்தப்பட்சம் 30 நாள்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த ப்ரோமஷன் கேஷ்பேக்கை பெற வாட்ஸ்அப் பிசனஸ் கணக்கை உபயோகிக்க முடியாது.
மேலும், நீங்கள் பணம் அனுப்பும் வாட்ஸ்அப் யூசரும், வாட்ஸ்அப் பேமெண்ட் இந்தியாவில் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். அப்போது, தான் கேஷ்பேக் சிஸ்டம் வொர்க் ஆகும்.
வாட்ஸ்அப் பே கேஷ்பேக் பெற சிம்பிள் ஸ்டெப்ஸ்
Step 1: Set up WhatsApp Pay
வாட்ஸ்அப் பே அமைத்திட, முதலில் வாட்ஸ்அப் லேடஸ்ட் வெர்ஷன் பதிவிறக்க வேண்டும். அடுத்து, ஏதெனும் தனிநபர் சாட்டை ஓப்பன் செய்து, டைப் பாரில் அட்டாச்மென்ட் ஐகானுக்கு அடுத்திருக்கும் Rupee ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இது, உங்கள் வாட்ஸ்அப் பே பேஜ்ஜூக்கு அழைத்து செல்லும்.
அடுத்து தோன்றும் திரையில், ‘Accept and continue’ கொடுத்தால், பேங்க் அக்கவுண்ட் விவரங்களை சேர்க்கும் தளத்திற்கு செல்வோம்.
குறிப்பு: வங்கியில் ரெஜிஸ்ட்ர் செய்திருக்கும் நம்பரும், வாட்ஸ்அப் கணக்கின் நம்பரும் ஒன்றாக இருக்க வேண்டும். பின்னர், வழிமுறைகளை ஃபாலோ செய்தால், வாட்ஸ்அப் பே அக்கவுண்ட் ரெடியாகும்.
Step 2: Invite some contacts
வாட்ஸ்அப் பே மூலமாக பணம் அனுப்பிட, சம்பந்தப்பட்ட நபரும் வாட்ஸ்அப் பே தளத்தை உபயோகிக்கும் நபராக இருக்க வேண்டும். வாட்ஸ்அப் பே கிரியட் செய்ததும், எதேனும் காண்டக்ட் சாட் பாக்ஸூக்கு சென்று, அவர்கள் வாட்ஸ்அப் பே தளத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப் பே அழைப்பு விடுக்கலாம். அவர்கள் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையை அணுகிவிட்டால், எளிதாக பணம் அனுப்பிவிடலாம்.
Step 3: cashback eligibility and make three transactions
வாட்ஸ்அப் அனைவருக்கும் கேஷ்பேக் கிடைக்கும் வகையில் டிசைன் செய்யவில்லை. வாட்ஸ்அப் கேஷ்பேக் பேனரை செயலியில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே கேஷ்பேக் வழங்குகிறது. இருப்பினும், குறைந்தப்பட்சம் அனுப்ப வேண்டிய தொகையை குறிப்பிடவில்லை.
நீங்கள் பேனரை பார்க்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கேஷ்பேக் அம்சத்திற்கு தகுதியானவர் இல்லை. உங்களுக்கு 11 ரூபாய் கிடைக்காது.
கீழே குறிப்பிட்டுள்ள பணப்பரிவர்த்தனைகளுக்கு கேஷ்பேக் கிடையாது
- ப்ரோமேஷன் பேனர் அல்லது கிப்ட் ஐகான் இல்லாத கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை
- QR கோட் பேமெண்ட்
- ரெக்கவுஸ்ட் அனுப்பி பேமெண்ட் அனுப்பினால்
- யுபிஐ ஐடி பதிவிட்டு பேமெண்ட் அனுப்பினால் கிடையாது.
- வாட்ஸ்அப்பில் மூன்றாம் தரப்பு செயலி மூலம் பணம் அனுப்பினால் கிடையாது.
நீங்கள் தகுதியுடைய பயனராக இருக்கும் பட்சத்தில், முதல் மூன்று பணப்பரிவர்த்தனைகளுக்கும் தலா 11 ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil