வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதி!

இந்த வசதி வந்த பிறகு வாட்ஸ்அப் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை

வாட்ஸ் அப் செயலி மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மிகப்பெரிய தகவல் பரிமாற்றம் செயலியாக இயங்கி வரும் வாட்ஸ் அப், கோடிக்கணக்காண யூசர்களை கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு மில்லியன் யூசர்கள் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்து செல்வதாக ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மிகப்பெரிய செல்வாக்கை பெற்றிருக்கும் வாட்ஸ் அப் செயலி அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான அனைத்து முயற்சிகளை செய்து வருகிறது.

சமூகவலைத்தளங்களின் ராஜாவாக திகழும், பேஸ்புக் செயலிக்கு, மிகப்பெரிய போட்டியாக வாட்ஸ் அப் பார்க்கப்படுகிறது. இரண்டு செயலின் நிறுவனங்களும் ஒன்றே என்றாலும், தொழில் நுட்ப வளர்ச்சியில் இதன் போட்டி தனித்தனியாக பிரித்து பார்க்கப்படுகிறது. சமீபத்தில், வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்பட்ட முக்கியமான அப்டேட்டுகள் யூசர்களிடம் அதிகளவில் வரவேற்பை பெற்றனர்.

தவறாக அனுப்பிய மெசேஜ்களை 8 நிமிடத்திற்குள் அழிப்பது, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வசதி, குரூப் காலிங், அட்மின்களுக்கு புதிய பொறுப்பு என அனைத்து அப்படேட்டுகளும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளன. இந்நிலையில், வாட்ஸ் அப்பை போன்ற மற்ற தகவல் பரிமாற்ற செயலிகளில் சிலவற்றில், பணப்பரிமாற்றம் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைப்போலவே, வாட்ஸ் அப்பிலும் வந்தால் நன்றாக இருக்கும் என்று, யூசர்கள் விரும்புவதாக அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இந்த வசதியை வாட்ஸ் அப்பில் கொண்டு வர அந்நிறுவனம் தற்போது முடிவெடுத்துள்ளது. இதன்படி, யூசர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், பணத்தை அனுப்ப முடியும். இந்த முயற்சி தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. இதன் இறுதிகட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்த பின்பு, இந்த ஆப்ஷன் அனைத்து யூசர்களுக்கும் ஆப்ஷனாக செயலியில் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி வந்த பிறகு வாட்ஸ்அப் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இதுக்குறித்து வாட்ஸ் அப் நிறுவனம், முன்னணி வங்கிகள் அனைத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த பணப்பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ் அப்பில் இடம் பெறும் என்று நம்பப்படுகிறது.

×Close
×Close