வாட்ஸ் அப்பில் வந்தது பணப்பரிமாற்ற வசதி!

நம்பர் மூலமே, எளிமையாக பணத்தைச் செலுத்தலாம்.

கடந்த சில மாதங்களாக ஆய்வில் இருந்த வாட்ஸ் மூலம் பணப்பரிமாற்ற வசதி இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூசர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலில் பணப்பரிவர்த்தனை செய்யும் முயற்சி சமீப காலமாக ஆய்வில் இருந்து வருகிறது, பீட்டா வெர்ஷனில் இருந்து வந்த இந்த அப்டேட் தற்போது அனைவரின் மொபைலில் உள்ள வாட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ளது. புதிய வெர்ஷனை அப்டேட் செய்து யூசர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிகப்பெரிய தகவல் பரிமாற்றம் செயலியாக இயங்கி வரும் வாட்ஸ் அப், அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான முயற்சியில் இதுவும் ஒன்று. தொழில் நுட்பத்தில் அதிவேக வளர்ச்சியுடன் முன்னேறி வரும் வாட்ஸ் அப்பில், பணப்பரிவர்த்தனை செய்யும் முறை மிகவும் எளிமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. யூபிஐ கொண்டு இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த யூபிஐக் கொண்டு பணப்பரிவர்த்தனை முறைக்கு, மொபைல் நம்பர் மட்டுமே போதுமானது. நம்பர் மூலமே, எளிமையாக பணத்தைச் செலுத்தலாம்.

வாட்ஸ் அப் நிறுவனம், இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. அதைப் போல் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளிடமும் அந்நிறுவனம் பணப்பரிமாற்றத்திற்குரிய அனைத்து நடைமுறைகளையும் செயல்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பணபரிவர்த்தனை செயல்முறை யூசர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய மெசெஜ் டெலிட்டிங் வசதி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வசதி, குரூப் காலிங், போன்ற அனைத்து அப்டேட்டுகளுக்கு பின்பு, நாள் ஒன்றுக்கு வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

×Close
×Close