எப்போது வரும் வாட்ஸ் அப்பில் பணம் மாற்றும் வசதி?

வாட்ஸ் அப் செயலில் இந்த இதற்கான செட்டிங் அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களாக ஆய்வில் இருந்த வாட்ஸ் மூலம் பணப்பரிமாற்ற வசதி  கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூசர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலில் பணப்பரிவர்த்தனை செய்யும் முயற்சி சமீப காலமாக ஆய்வில் இருந்து வருகிறது. இந்தப் பணப்பரிமாற்றம் தற்போது மத்திய அரசின் யு.பி.ஐ சேவையின் மூலம் சோதனை  ஓட்டத்தில் இறங்கியுள்ளது.

இதனையடுத்து கூடிய விரைவில் இந்தியாவில் இந்த சோதனை ஓட்டம் நிறைவு பெற்று,  வாட்ஸ் அப்  செயலில் இந்த இதற்கான செட்டிங் அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தில் அதிவேக வளர்ச்சியுடன் முன்னேறி வரும் வாட்ஸ் அப்பில், பணப்பரிவர்த்தனை செய்யும் முறை மிகவும் எளிமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. யூபிஐ கொண்டு இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த யூபிஐக் கொண்டு பணப்பரிவர்த்தனை முறைக்கு, மொபைல் நம்பர் மட்டுமே போதுமானது. நம்பர் மூலமே, எளிமையாக பணத்தைச் செலுத்தலாம்.

இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி வாட்ஸ் அப் யூசர்கள் உள்ளனர். டிஜிட்டல் இந்தியாவில் பணப்பரிவர்த்தனை சேவையாக பேட்டியம் உட்ப்ட பல செயலிகள் புகழகத்தில் இருந்து வருகின்றன. இவை எல்லாவற்றை ஓரங்கட்டி விட்டு வாட்ஸ் செயலில் முன்னிலை பெற தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது.  அப்களை எல்லாம் விட, ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது.

இதற்காக வாட்ஸ் அப் ஐஎஸ்ஓ 2.18.21 மற்றும் ஆண்டாராய்டு பீட்டா 2.18.41 என்ற பரிமாற்ற பதிப்புகளை தேர்வு செய்துள்ளது.  எனவே இனி வரும் காலங்களில் இந்த வசதி அனைத்து யூசர்களின் வாட்ஸ் அப்பில் இடம் பெறும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

×Close
×Close