மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பயனரின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
சமீபத்திய நாட்களில் நிறுவனம் பாதுகாப்பை மேம்படுத்த பல அம்சங்களை அறிவித்துள்ளது, ஆனால் பல பயனர்களுக்கு இது பற்றி தெரியவில்லை. வாடஸ்அப்பில் கிடைக்கும் தனியுரிமை விருப்பங்களைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பதை உறுதிசெய்ய, மெட்டா சமீபத்தில் தனியுரிமை சரிபார்ப்பை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் பயனர்கள் தங்கள் தனியுரிமை அமைப்புகளை விரைவாக மதிப்பாய்வு செய்து நிர்வகிக்க அனுமதிக்கிறது, அது பற்றிப் பார்ப்போம்.
வாட்ஸ்அப்பின் தனியுரிமைச் சரிபார்ப்பு அம்சமானது, வாட்ஸ்அப் செட்டிங்களில் உள்ள அனைத்து தனியுரிமை அமைப்புகளின் மூலமாகவும் பயனர்களுக்கு வழிகாட்டுகிறது, இதனால் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு சரியான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
உங்கள் ப்ரைவசி செட்டிங்ஸ் அம்சம் சென்று "Sஸ்டார் செக்அப்" எனக் கொடுக்கவும். இப்போது பல்வேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மேலும் உங்கள் ஷேட்டிற்கு கூடுதலாக ப்ரைவசி ஆப்ஷன்கள் எனெபிள் செய்து கொள்ளலாம்.
இந்த அம்சம் மூலம் சைலன்ஸ் அன்னோன் காலர், ஸ்கீரின் லாக், Two-factor authentication (2FA) மற்றும் பல வசதிகளை ஒரே ஆப்ஷன் ப்ரைவசி செக்அப் அம்சத்தில் செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“