வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சி

முன்னணி தகவல் தொடர்பு அப்பிளிகேஷனான வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட இந்த சிக்கல் சரி செய்யப்பட்டு வழக்கம் போல செயல்படத்தொடங்கியதால்,  பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

By: Updated: January 19, 2020, 07:41:11 PM

முன்னணி தகவல் தொடர்பு அப்பிளிகேஷனான வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட இந்த சிக்கல் சரி செய்யப்பட்டு வழக்கம் போல செயல்படத்தொடங்கியதால்,  பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உலகின் முன்னணி தகவல் தொடர்பு அப்பிளிகேஷனான வாட்ஸ் அப் பல மில்லியன் செல்போன் உபயோகிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

பலரும் போன்மூலம் புகைப்படம், ஏதேனும் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அவர்கள் முதல் தேர்வு வாட்ஸ் அப்தான்.இந்த வாட்ச்ஸ் அப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் எதுவும் அனுப்ப முடியாதபடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், உலகின் பல பகுதிகளில் வாட்ஸ் அப் பயனாளர்கள் புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர் எதையுமே அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த சிக்கல் குறித்து வாட்ஸ் அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை; இதன் காரணமாக #Whatsappdown என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து சில பகுதிகளில் வாட்ஸ் அப்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை சரியாகி உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்த சிக்கல் இன்னும் சரியாகவில்லை என்று பலரும் கூறிவருகின்றனர்.

இப்படி முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப் முடங்கியதால் பயனாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு, வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, பயனாளர்கள் வழக்கம் போல புகைப்படம், வீடியோக்களை அனுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp problem users can not send photos videos stickers media files

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X