மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பயனர் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘Protect IP address’ என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது.
இது பெயர் குறிப்பிடுவது போல போன் ஐ.டி அட்ரஸ், லொகேஷன் ஆகியவற்றை மூன்றாம் தரப்பு செயலிகளிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்-ல் இருந்து கால் செய்யும் போது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக அமையும்.
இது தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த வசதி பயனர் தனியுரிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ்அப் செட்டிங்ஸ் அம்சம் சென்று ப்ரைவசி கிளிக் செய்யவும். அடுத்து new Advanced’ என்பதை கொடுக்கவும். இப்போது அதில் Protect IP address in calls என்பதை எனெபிள் செய்யவும். அவ்வளவு தான். இப்போது உங்கள் வாட்ஸ் அப் conversation-க்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“