Whatsapp reaches new milestone : உலகின் அதிக பிரபலமான மெசேஜிங் ஆப்பாக இருக்கும் வாட்ஸ்ஆப் தற்போது புதிய மைல்ஸ்டோனை எட்டியுள்ளது. தற்போது இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2 பில்லியனை எட்டியுள்ளது. அதாவது உலக மக்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட கால்வாசி நபர்கள் இந்த ஆப்பினை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் நபர்கள் இந்த செயலை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
Advertisment
வீடியோ காலிங், சாட்கள் என்று தொலை தூரத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் உரையாட வசதியான தளமாக அமைந்தது இந்த செயலி. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி நிறைய அப்டேட்களுடன் இந்த செயலி புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
நாம் நம்முடைய வாழ்வின் பெரும் பகுதியினை ஆன்லைனில் செலவிடும் நேரம் வந்துவிட்ட நிலையில் நம்முடைய உரையாடுகளை பாதுகாக்கும் நிலையில் இருக்கின்றோம். நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்திகளும், மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் செய்திகளும் உங்களின் போன்களில் மட்டுமே இருக்கும். உங்களுடைய மெசேஜ்களை யாரும் பார்க்கவோ, உங்களின் ரகசியங்களை யாரும் ஒட்டுக் கேட்கவோ முடியாது. இப்போது போன்றே வருங்காலத்திலும் பேஸ்புக்கின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிக சுதந்திரமாக இயங்கும் என்று வாட்ஸ்ஆப்பின் சி.இ.ஒ வில் கேத்கார்ட் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”