வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் காலிங் வசதியில் புது அப்டேட் கொண்டு வருகிறது. வாட்ஸ்அப் டெவலப்பர்கள் வாய்ஸ் காலிங் இன்டர்வேசில் மாற்றத்தை கொண்டு வர உள்ளனர்.
அதில் வாட்ஸ்அப் காலிங்கில் எண்ட் மற்றும் மியூட் பட்டனை ஸ்கிரீன் கீழே இருந்து டாப் பாரில் வைக்கும் படி அப்டேட் வருகிறது. நீங்கள் அழைப்பை minimise செய்து வைக்கும் போது இது தெரியும். புதிய அப்பேட் படி மியூட் பட்டன் ஸ்கிரீன் மேல் இடதுபுறத்திலும், அதேசமயம் எண்ட் கால் பட்டன் வலப்புறத்திலும் இடம் பெறுகிறது.
இதன் மூலம் பயனர்கள் கால் கட் செய்ய மீண்டும் வாட்ஸ்அப் ஸ்கீரினுக்கு செல்லத் தேவையில்லை. இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“