இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் டிஸ்கார்டின் வாய்ஸ் சேனல் போன்றே புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வாய்ஸ் ஷேட் என அழைக்கப்படும் இந்த அம்சம் குரூப் பயனர்கள் அனைவரும் வாய்ஸ் ஷேட் செய்ய அனுமதிக்கிறது. ஆனால் இது தற்போதுள்ள வாய்ஸ் கால், வாய்ஸ் நோட்ஸ் போன்றவற்றில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.
WABetaInfo படி, இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு 2.23.16.19 க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் ஒரு சில பயனர்களுக்கு கிடைக்கிறது. குரூப் கால் போல் அல்லாமல் ரிங் செய்வதற்குப் பதிலாக, இது குரூப் பயனர்களுக்கு அமைதியான அறிவிப்பை அனுப்பும். பீட்டா வெர்ஷனில் 32 பேர் இந்த குரூப் வாய்ஸ் ஷேட்டில் இணையலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.
ட்விட்டர் ஸ்பேஸ் மற்றும் டிஸ்கார்ட் வாய்ஸ் சேனலைப் போலவே, பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் சேரலாம் அல்லது வெளியேறலாம். குரூப்பில் யாராவரு ஒருவர் வாய்ஸ் ஷேட் செய்தால் குரூப் ஐகான் waveform ஐகானாக மாறும். ‘கனெக்ட்’ பட்டன் காண்பிக்கப்படும். அதைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.
'குரூப் கால்'களுடன் ஒப்பிடும்போது, வாய்ஸ் ஷேட் manual ஆக மற்றவர்களை சேர்க்க அனுமதிக்காது. வாட்ஸ்அப்பில் உள்ள மற்ற எல்லா விஷயங்களைப் போலவே, வாய்ஸ் ஷேட் அம்சமும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும். ஆனால் நோட்டிவிக்கேஷன் காண்பிக்கப்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“