மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. 500 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர ஆக்டிவ் பயனர்களுடன் (MAUs) வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது “Typing Indicators” என்ற வசதி அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் மற்ற பயனர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப டைப் செய்தால் 3 புள்ளிகள் டான்ஸிங் ஆடுவது போன்று குறியீடு காண்பிக்கும்.
இது குரூப் ஷேட் அல்லது தனிநபர் ஷேட் பக்கம் என இரண்டிலும் காண்பிக்கப்படும். இந்த வசதி ஆண்டிராய்டு, ஐபோன் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளளது.
இது பயனர்களிடையே ரியல்- டைம் engagement-ஐ உறுதி செய்ய கொண்டு வரப்பட்டுள்து. தற்போது இது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“