Whatsapp rolls out disappearing photos feature how it works Tamil News : பீட்டா பயனர்களுக்காகக் காணாமல் போகும் புகைப்பட அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடுகிறது. இது, ‘ஒருமுறை காண்க’ என்று அழைக்கப்படுகிறது. இது, இன்ஸ்டாகிராமின் காலாவதியாகும் மீடியா அம்சம் செயல்படுவதைப்போல் இருக்கும். செய்தி பெறுபவர்கள் அதைத் திறந்து அரட்டையிலிருந்து வெளியேறியதும் புகைப்படம் மறைந்துவிடும். இந்த அம்சம் தற்போது ஆண்டிராய்டு வாட்ஸ்அப் பயனர்களுக்குக் கிடைக்கிறது.
WaBetaInfo பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்கள், பயனர்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் காணாமல் போகும் புகைப்படங்களை அனுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டதும், கடிகாரம் போன்ற ஐகானைத் க்ளிக் செய்ய வேண்டும். இது, “தலைப்பைச் சேர்” பட்டியைக் காண்பிக்கும். காணாமல் போகும் புகைப்படங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பலாம்.
வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் GIF-களுக்கு இந்த அம்சம் செயல்படுகிறது. யாருடனும் மீடியாவை பகிரும்போது, ஒரு முறை பார்க்க பட்டன் உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் இன்னும் அந்த அம்சத்தைப் பெறவில்லை என்று அர்த்தம். ஒருவர் இந்த அம்சத்தை வாட்ஸ்அப்பின் 2.21.14.3 ஆண்டிராய்டு பதிப்பில் காணலாம்.
இந்த வாட்ஸ்அப் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம், நீங்கள் வாசிப்பு receipt-களை முடக்கினால், நீங்கள் ஒரு முறை பார்க்கப் புகைப்படம் அல்லது வீடியோ தொகுப்பைத் திறந்திருக்கிறீர்களா என்பதைப் பெறுநரால் பார்க்க முடியும். ஆனால், பெறுநர் உங்கள் படத்தை எப்போது திறந்தார் என்பதை நீங்கள் சரிபார்க்க முடியாது.
நீங்கள் ஒரு குழுவில் காணாமல் போகும் படத்தைப் பகிர்கிறீர்கள் என்றால், நீங்கள் வாசிப்பு receipts-களை முடக்கியிருந்தாலும் பிற பங்கேற்பாளர்கள் காலாவதியான புகைப்படங்களைத் திறக்கும்போது நீங்கள் பார்க்க முடியும். ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் அம்சங்களைப் பயன்படுத்தி பெறுநரால் புகைப்படம் அல்லது வீடியோவைச் சேமிக்க முடியும் என்பதையும், ஸ்கிரீன் ஷாட் கண்டறிதல் இல்லாததால் வாட்ஸ்அப் உங்களுக்கு அறிவிக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழுக்களில் ‘ஒருமுறை காண்க’ பட்டனை பயன்படுத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர உங்களுக்கு அனுமதி உண்டு. மேலும், “செய்தி தகவல்” பிரிவில் அதனைத் திறந்தவர்கள் யார் என்பதை நீங்கள் காண முடியும். “பொதுவான குழுக்களில் தடுக்கப்பட்ட தொடர்புகள், அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் திறக்க முடியும். உண்மையில், அவர்கள் உங்களுக்கு செய்தி அனுப்பவோ அழைக்கவோ முடியாது. ஆனால், அவர்கள் உங்களுடன் குழுக்களாகத் தொடர்பு கொள்ள முடியும்” என்று WaBetaInfo கூறுகிறது.
இந்த அம்சத்தை இயக்காத எவருக்கும் ஒருமுறை காண்க பட்டனை பயன்படுத்தி புகைப்படத்தை அனுப்பினால், இந்த அம்சம் செயல்படும். தவிர, ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் இந்த அம்சத்தின் இருப்பை உறுதிப்படுத்தினார். மேலும், இது விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த அம்சத்தின் பொது வெளியீடு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil