மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு தரப்பு பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ஸ்டேட்டஸ் அம்சத்தில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மிகவும் வரவேற்பு பெற்ற அம்சம் ஆகும். போட்டோ, வீடியோ என எதை ஸ்டேட்டஸ் ஆக வைத்தாலும் 24 மணி நேரத்தில் அவை தானாகவே டெலிட் ஆகிவிடும். முன்பு போட்டோ, வீடியோ, டெக்ஸ்ட் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். தற்போது வாய்ஸ் நோட்ஸ், GIF என எல்லாவற்றையும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம்,
வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ்
வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ் வைக்க எப்போதும் போல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பக்கம் சென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள பென்சில் ஐகானை கிளிக் செய்யவும். இப்போது அங்குள்ள மைக்ரோபோன் பட்டனை அழுத்தி பிடித்து வாய்ஸ் ரெக்கார்டு செய்யவும். இப்போது அதை போஸ்ட் செய்யவும். அவ்வளவு தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“