WhatsApp Fake Message: வாட்ஸ்ஆப் தனது 10-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் தன்னுடைய பயனர்களுக்கு 1000 ஜிபி இலவசமாய் வழங்கப்போவதாக ஒரு பொய்யான செய்தி வாட்ஸ்ஆப் பில் பரவத் தொடங்கியுள்ளது.
அந்த செய்தி பின் வருமாறு உள்ளன: வாட்ஸ்அப் 1000 ஜிபி இலவச இணையத்தை வழங்குகிறது! ”இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் , அந்த லிங்கை கிளிக் செய்தால் பயனர்கள் ஒரு சர்வே யை முடிக்கும்படி கேட்கிறது. பிறகு, இலவச டேட்டாவை பெற வாட்ஸ்அப்பில் 30 நபர்களுடன் சில விளம்பர படத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்பதாய் அந்த செய்திகள் உள்ளன.
இது திட்டமிட்ட மோசடி பிரச்சாரம் என்று போர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த போலி செய்தியைப் படித்த ஐடி செக்யூரிட்டி நிறுவனமான இஎஸ்இடி யின் ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறுகையில் " தற்சமயம் அந்த செய்தியில் உள்ள லிங்கால் பெரிய தீங்கு விளைவிக்கும் ரான்சம்வேரோ மற்றும் பயனரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான சாராம்சமோ இல்லை. இணைய குற்றவாளிகள் விளம்பர கிளிக் வருவாயைப் பெறுவதற்காகவே இந்த இணைப்பை பயன்படுத்திகிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் எப்போதும் வேண்டுமானாலும் மாறலாம். இந்த லிங்கால் நாளைய நாட்களில் பெரும் ஆபத்தைக் கூட ஏற்படுத்த முடியும்" என்றார்கள்.
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான மெக்காஃபி நிறுவனத்தின் முதன்மை நுகர்வோர் பாதுகாப்பு நற்செய்தியாளராக இருக்கும் கேரி டேவிஸ் இதை பற்றி தெரிவிக்கையில், " சந்தேகத்திற்கு விதமாக இருக்கும் எந்த லிங்கையும் நீங்கள் தவிர்ப்பதே நல்லது உங்களது சந்தேங்களை அந்தந்த நிறுவங்களின் இணையதளத்திற்கு நேராக சென்று ஏதேனும் ப்ரோமோஷனல் ஈவென்ட்ஸ் செய்கிறார்களா! என்று பார்த்து விடுங்கள்",என்றார்.
எழுத்துப்பிழைகள் மற்றும் மிகவும் உண்மைகள் போல் பாசாங்கு செய்யும் விளம்பரத்தை அடியோடு தவிர்ப்பது மிகவும் நல்லது என்று டேவிஸ் மீண்டும் புன்னகையோடு தெரிவித்தார்.
பயனர்களே, இன்று இந்த வாட்ஸ்ஆப் செய்தியில் பெரிய ஆபத்து இல்லை என்றாலும் இனிவரும் களங்களில் விழிப்புடன் இருங்கள். இது போன்ற போலி செய்திகளின் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்களாய் இருக்கும் உங்களுது கிரெடிட் கார்டு நம்பர் , ஆன்லைன் வங்கி சேவையின் கடவுச்சொல்லை உங்களிடம் இருந்து பரிக்கக் கூடும்.
"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்" என்ற வாக்கியம் நமக்கு ஒன்றும் புதிதல்ல.