Advertisment

உங்கள் வாட்ஸ் ஆப் தளம் பாதுகாப்பாக இருக்கிறதா? உறுதி செய்ய சிம்பிள் வழி இது

இந்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் மற்றும் பயனர்களிடையே வளர்ந்து வரும் அவநம்பிக்கையை உடைக்கும் முயற்சியில், வாட்ஸ்அப் இறங்கியது.

author-image
WebDesk
New Update
Whatsapp backup and Security Tamil News

Whatsapp Security Tamil News

Whatsapp Security Tamil News: வாட்ஸ்அப் போன்ற செய்தியிடல் செயலிகளைப் பயன்படுத்தும் போது பயனர்களின் தனியுரிமை குறித்து நிறைய விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் தளத்தின் வழியே சமீபத்தில் கசிந்த செய்திப் பரிமாற்றங்கள், இதிலிருக்கும் end-to-end encryption அம்சத்தைப் பற்றிய கேள்விகளையும் சந்தேகத்தையும் மேலும் வலுப்படுத்தியிருக்கின்றன. வாட்ஸ்அப்பிற்கான மிகப்பெரிய மார்கெட்டாக இந்தியா இருக்கிறது. இது போன்ற ஊழல்கள், வாட்ஸ்அப் பயனர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

Advertisment

இந்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் மற்றும் பயனர்களிடையே வளர்ந்து வரும் அவநம்பிக்கையை உடைக்கும் முயற்சியில், வாட்ஸ்அப் இறங்கியது. அதாவது, பெறுநரால் மட்டுமே அனுப்புநரின் செய்தியை end-to-end encryption குறியாக்கத்துடன் பார்க்க முடியும் என்றும் , கூகுள் டிரைவ் அல்லது ஐக்ளவுட்டில் (iCloud) சேமிக்கப்படும் செய்திகள் end-to-end encryption செய்யப்படவில்லை அதனால், ஹேக் செய்யப்படலாம் என்றும் தங்களின் அறிக்கையில் தெளிவுபடுத்த முயன்றது வாட்ஸ்அப்.

இருப்பினும், ஓர் வாட்ஸ்அப் பயனர் தன்னுடைய செய்திகள் அனைத்தும் end-to-end என்க்ரிப்ஷன் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அவற்றை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்பதையும் உறுதிப்படுத்த மற்றொரு வழியும் உள்ளது. தனிப்பட்ட நபரின் செய்திப் பரிமாற்றங்கள் ' பேக்கப் (Backup)' செய்யப்படவேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவு, பயனருக்குக் கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும், ஒவ்வொரு நாள், வாரம் அல்லது ஒவ்வொரு மாதமும் இந்த செய்திகளை பேக்கப் எடுப்பதற்கான விருப்பத்தையும் பயனர்களுக்கு வழங்குகிறது. WiFi அல்லது செல்லுலார் இணைப்பு மூலம் செய்திகள் பேக்கப் எடுக்கப்படவேண்டுமா என்பதற்கான ஆப்ஷனும் இருக்கிறது.

உங்கள் செய்திகளைக் குறைந்தபட்சம் end-to-end என்க்ரிப்ஷன் செய்தாலே போதும் பேக்கப் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கான எளிய வழிகாட்டி இங்கே.

# வாட்ஸ்அப்பைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும். பின்னர், 'செட்டிங்ஸ்' ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். IOS சாதனங்களில், கீழ் வலது மூலையில் தெரியும் செட்டிங் ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.

# ஆண்ட்ராய்டு சாதனங்களில் ‘Back up to Google Drive’ ஆப்ஷனும், IOS-ல் 'Chat' ஆப்ஷன் சென்று 'Backup' விருப்பத்தை தேர்வு செய்யவேண்டும்.

Whatsapp backup and secure your chats tamil news Whatsapp backup and secure your chats

# ‘never’, ‘Only when I tap “Back up” உள்ளிட்ட ஐந்து ஆப்ஷன்கள் இருக்கும். உங்கள் செய்திகளைப் பாதுகாக்க இந்த இரண்டு விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். IOS சாதனங்களில், நீங்கள் ‘Auto Backup’ விருப்பத்தைத் தேர்வு செய்யவேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Technology Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment