வாட்ஸ்ஆப் மொபைல் செயலியில் புதிய அப்டேட் வந்துள்ளது. இனி அவரவர் விருப்பம் போல் வாட்ஸ்ஆப் குரூப்பில் சாட் செய்ய இயலாது. யார் யார் குரூப்பில் கருத்துகளை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதை குரூப் அட்மின் மட்டுமே தேர்வு செய்ய இயலும்.
WhatsApp New Update : குரூப் சேட் புதிய அப்டேட் செயல்படுத்தும் முறை மற்றும் நோட்டிஃபிக்கேஷன்
வாட்ஸ்ஆப் செயலி தன்னுடைய புதிய அப்டேட்டை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்(iOS) இயங்குதளத்தில் செயல்படும் மொபைல்களுக்கான அப்டேட் ஆகும். இனி குரூப் சாட்டில் அனைவரும் கருத்துக்களைப் பரிமாற வேண்டுமா அல்லது குறிப்பிட்ட நபர்கள் மட்டும் கருத்துக்களை அறிவிக்க வேண்டுமா என்பதை அட்மின்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதனால் தேவையில்லாமல் பெரிதாக நீளும் பேச்சுகள் தவிர்க்கப்படும்.
’செண்ட் மெசேஜ்’ (Send Message) என்ற ஆப்சன், குரூப் செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும். அதில் 'ஆல் பார்ட்டிசிபெண்ட்’ (All Participant) அல்லது 'ஒன்லி அட்மின்ஸ்' (Only Admins) என இரண்டில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து கொள்ளலாம். புதிதாக வந்திருக்கும் இந்த அப்டேட்டினை செட்டிங்ஸை குரூப் அட்மின்கள் மட்டுமே காண இயலும்.
எப்படி இதனை செயல்படுத்துவது
உங்கள் வாட்ஸ்ஆப் குரூப்பின் 'குரூப் இன்ஃபோ’ பகுதியில் இருக்கும் குரூப் செட்டிங்கஸை தேர்வு செய்ய வேண்டும்
புதிதாக வந்திருக்கும் அப்டேட்டில் 'குரூப் செட்டிங்ஸ்’ பகுதியில் எடிட் குரூப் இன்ஃபோ, செண்ட் மெசேஜ்சஸ், எடிட் குரூப் அட்மின்ஸ் என்ற மூன்று ஆப்சன்கள் இருக்கின்றன.
செண்ட் மெசேஜ்சஸ் பகுதியில் மீண்டும் இரண்டு ஆப்சன்கள் இருக்கும். அதில் ஆல் பார்ட்டிசிபெண்ட் மற்றும் ஒன்லி அட்மின்ஸ் இதில் ஏதாவது ஒன்றை உங்களின் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த இரண்டு தேர்வுகளுக்கு மத்தியில் அட்மின் எதை தேர்ந்தெடுத்தாலும் அதனுடைய நோட்டிஃபிக்கேஷன் குரூப்பில் இருக்கும் அனைவருக்கும் சென்றுவிடும்.
அட்மின் யாரை வேண்டுமானாலும் அந்த குரூப்பின் புதிய அட்மினாக நியமித்துக் கொள்ளலாம்.