Advertisment

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் வருகிறது அதிரடி மாற்றம்: புதிய யு.ஐ சோதனை

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களில் வரும் அப்டேட்களை ஓபன் செய்யமல் அப்படியே ப்ரிவியூ ( preview) செய்யும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Ne Whtsap.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

நிறுவனம் தற்போது ஸ்டேட்டஸ் மெனுவில் புதிய UI -ஐ சோதனை செய்து வருகிறது. இதன் மூலம்  ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்ஸ் அப்டேட்களை ஓபன் செய்யமல் அப்படியே ப்ரிவியூ ( preview) செய்யும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஸ்டேட்டஸ் பார் ஸ்டோரிஸ் மற்றும் சேனல்களை எளிதாக பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் சோதனை செய்கிறது. அந்தவகையில் புதிய அம்சத்தில் ஸ்டேட்டஸ்  rectangular format-ல் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. 

whatsapp-beta.webp

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சேனல் அம்சம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் இடம் பெற்றதால் அது பயனர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்கனவே பார்க்கப்பட்ட ஸ்டேட்டஸ் ( seen stories) hide செய்யப்பட்டது. எனவே நிறுவனம் இதை கருத்தில் கொண்டு புதிய அம்சத்தை மேம்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

 

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment