New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/09/whatsapp-status-2025-08-09-17-27-15.jpg)
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இனி மியூசிக், கொலாஜ், ஸ்டிக்கர்கள்... 4 புதிய அப்டேட்!
சும்மா டெக்ஸ்ட் மட்டும் போடுவதும், ஒரே ஒரு போட்டோ வைப்பதும் போரடிக்குதா? இனி பிரச்னை இல்லை. இன்ஸ்டாகிராம் போல கலக்கலான ஸ்டேட்டஸ் வைக்க, வாட்ஸ்அப் 4 புது அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இனி மியூசிக், கொலாஜ், ஸ்டிக்கர்கள்... 4 புதிய அப்டேட்!
சும்மா டெக்ஸ்ட் மட்டும் போடுவதும், ஒரே ஒரு போட்டோ வைப்பதும் போரடிக்குதா? இனி அந்தப் பிரச்னை இல்லை. இன்ஸ்டாகிராம் போல கலக்கலான ஸ்டேட்டஸ்களை வைக்க, வாட்ஸ்அப் 4 புது அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மெட்டா நிறுவனத்தின் அதிரடி அப்டேட்டுகள், அடுத்த சில மாதங்களில் படிப்படியாக எல்லோருக்கும் வந்து சேரும். சரி, அந்தப் புது அம்சங்கள் என்னென்னன்னு பார்ப்போமா?
1. கலர்ஃபுல் கொலாஜ்:
நம்ம லேஅவுட் (Layout) வசதிதான் இதில் செம ஸ்பெஷல். ட்ரிப் போயிட்டு வந்தா, ஒரே ஒரு போட்டோவை மட்டும் ஸ்டேட்டஸில் வெக்க மனசு வருமா? இனி கவலையே இல்லை. அதிகபட்சம் 6 படங்களை அழகா கொலாஜ் செஞ்சு, ஒரே ஸ்டேட்டஸா போட்டு அசத்தலாம்.
2. பாட்டுப் போடு, ஸ்டிக்கர் சேரு:
அண்மையில் பாட்டுச் சேர்க்கும் வசதி வந்தது. இப்போ அதற்கும் ஒருபடி மேலே போய், மியூசிக் ஸ்டிக்கர்கள் வந்திருக்கு. நீங்க ஒரு செல்ஃபி எடுக்கறீங்களா? உங்களுக்குப் பிடிச்ச பாட்டை அதுல ஸ்டிக்கரா சேர்த்து, ஆடியோ-விஷுவல் விருந்தையே வைக்கலாம்!
3. உங்கள் படங்களே ஸ்டிக்கர்கள்:
இது மேஜிக் மாதிரி! உங்க கேலரியில் உள்ள எந்தப் படத்தையும் ஒரு பிரத்யேக ஸ்டிக்கராக மாற்றலாம். அதை கிராப் செஞ்சு, சைஸை மாத்தி, புதுசா ஒரு வடிவம் கொடுத்து ஸ்டேட்டஸ்ல சேர்க்கலாம். இனி ஃபன்னி மீம் ஸ்டிக்கர்களுக்குக் கஷ்டப்பட வேண்டாம்.
4. 'ஆட் யுவர்ஸ்' அம்சம்
இது இன்ஸ்டாகிராமில் நம்ம எல்லோருக்கும் பிடிச்ச அம்சம். "இன்றைய பெஸ்ட் காபி மொமெண்ட்" அல்லது "பழைய நினைவுகள்" மாதிரி தலைப்பைக் கொடுத்து, உங்கள் நண்பர்களையும் அதே தலைப்பில் ஸ்டேட்டஸ் போட அழைக்கலாம். எல்லோரும் சேர்ந்து ஒரே தீமில் போட்டோக்களை ஷேர் செய்வது இன்னும் ஜாலியாக இருக்கும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இதுபோல, வாட்ஸ்அப் அவ்வப்போது புது அம்சங்களைக் கொண்டு வந்தாலும், சைபர் மோசடி கும்பல்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மோசடி கணக்குகளை வாட்ஸ்அப் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.