WhatsApp Status Updates Feature : வாட்ஸ் ஆப் செயலி மாதத்திற்கு ஒரு அப்டேட்டை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட்டஸ் அப்டேட்டினை கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்டது வாட்ஸ்ஆப் நிறுவனம். அந்த புதிய சிறப்பம்சங்களிலும் எக்கச்சக்க அப்டேட்டுகளை கடந்த காலங்களில் வாட்ஸ்ஆப் வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp Status Updates Feature
இப்போது செயல்பட்டு வரும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போனில் உள்ள அனைத்து காண்டாக்ட்டுகளுக்கும் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் புதிய அப்டேட் படி, வாடிக்கையாளர் அதிக அளவில் யாருடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடுகிறாரோ அவர்களுக்கு ஸ்டேட்டஸ் அப்டேட்டேஸ் முதலில் தெரியும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
ப்ரேசில், ஸ்பெய்ன் மற்றும் இந்தியாவில் சில ஆப்பிள் போன்களுக்கு தற்போது இந்த அப்டேட்டினை ஏற்கனவே வழங்கியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். முதலில் ஆப்பிளிலும், பிறகு ஆண்ட்ராய்ட் போன்களிலும் இந்த அப்டேட் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபைண்ட் பிசினஸ் என்ற புதிய ஆப்சனும் தற்போது, பீட்டா ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. அதே போல் வாட்ஸ்ஆப் க்ரூப் இன்விடேசன் என்ற சிறப்பம்சங்களும் வெய்ட்டிங் லிஸ்ட்டில் உள்ளது.
மேலும் படிக்க : உலகின் முதல் ஃபோல்டபிள் போன்... சாம்சங்கின் பிரம்மாண்ட அறிமுகம்