என்னமா டெவலப் பண்றாங்கய்யா... வாட்ஸ் ஆப் புதிய ஆனந்த அனுபவத்திற்கு ரெடி ஆகிட்டீங்களா?
Whatsapp News: பயனர்கள் இந்த அம்சத்தை சோதித்து பார்க்க விரும்பினால் அவர்கள் Beta பதிப்பில் சோதித்துப் பார்க்கலாம். WhatsApp Business லும் வேலை செய்கிறது.
Whatsapp News: பயனர்கள் இந்த அம்சத்தை சோதித்து பார்க்க விரும்பினால் அவர்கள் Beta பதிப்பில் சோதித்துப் பார்க்கலாம். WhatsApp Business லும் வேலை செய்கிறது.
WhatsApp, whatsapp features, new features in whatsapp, whatsapp stickers, animated stickers on whatsapp, whatsapp news, whatsapp updates, whatsapp beta version, WhatsApp news, WhatsApp news in tamil, WhatsApp latest news, WhatsApp latest news in tamil
WhatsApp News In Tamil: WhatsApp beta வில் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் சோதனை நடைபெறுகிறது. முகநூலுக்கு சொந்தமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ் ஆப் தனது beta பதிப்பில் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS அடிப்படையிலான கைபேசிகளுக்காக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் குறித்தான சோதனையை தொடங்கியுள்ளது. வாட்ஸ் ஆப்பின் iOS க்கான beta பதிப்பு 2.20.70.26 லும், ஆண்ட்ராய்டுக்கான beta பதிப்பு 2.20.194.7 லும் இந்த அம்சம் கிடைக்கிறது. சில காலமாக வாட்ஸ் ஆப் அனிமேஷன் ஸ்டிக்கர்களுக்கான வேலையை செய்து வருகிறது ஆனால் அந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக எப்போது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.
Advertisment
ஸ்டிக்கர் அம்சம் கடந்த 2019 ஆம் ஆண்டே இந்த உடனடி செய்தியிடல் தளத்தால் வெளியிடப்பட்டாலும், அனிமேஷன் ஸ்டிக்கர்களைப் பொறுத்தவரையில் அது சோதனைக்கு அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. எனினும் இந்த ஆப், தனது சொந்த default ஸ்டிக்கர் பேக் மற்றும் பயனர்கள் மூன்றாம் தரப்பு பேக்களிலிருந்து பதிவிரக்கம் செய்துக் கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது.
பயனர்கள் இந்த அம்சத்தை சோதித்து பார்க்க விரும்பினால் அவர்கள் Beta பதிப்பில் சோதித்துப் பார்க்கலாம். இந்த அம்சம் WhatsApp Business லும் வேலை செய்கிறது மேலும் இது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்த அம்சம் மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளும் கிடைக்கும் வரை அம்சம் முழுமை பெறாது. சமீபத்திய beta அப்டேட் மூலம், முதல் பகுதியில் beta பயனர்கள் அனிமேஷன் ஸ்டிக்கர்களை காண முடியும், இந்த ஸ்டிக்கர்களை அனுப்பவும் star செய்யவும் forward செய்யவும் முடியும். இந்த அனிமெஷன் ஸ்டிக்கர்களை மூன்றாம் தரப்பு ஸ்டோர்களில் இருந்தும், WhatsApp ஸ்டோரிலிருந்தும் பதிவிரக்கம் செய்வது இதில் இன்னும் வரவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil