Whatsapp New Update Tamil News: ஒவ்வொரு வாரமும் ஆச்சரியமூட்டும் மற்றும் பயனுள்ள பல அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சேமிப்பக கருவியை அறிவித்தது. இது, பயனர்கள் தொலைபேசியில் உள்ள உள்ளடக்கத்தை எளிதில் அடையாளம் காணவும், மதிப்பாய்வு செய்யவும் மற்றும் மொத்தமாக நீக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில், தேவையற்ற வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் மீடியா ஃபைல்களை மொத்தமாக நீக்குவது மிகப் பெரிய வேலையாக இருக்கிறது.
Advertisment
புதிய சேமிப்பக கருவி பயனர்களுக்குச் சிறிது இடத்தை உருவாக்க மற்றும் அனைத்து தேவையற்ற மீடியா ஃபைல்களை அழிக்கவும் உதவுகிறது. நம்மில் பெரும்பாலோர் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாட்ஸ்அப், ஜூம் போன்ற ஆன்லைன் தளங்கள் வழியாக இணைக்கிறோம். இந்நிலையில் இதுபோன்ற அப்டேட் ஓர் முக்கியமான அம்சமாகவே இருக்கிறது.
பல முறை அனுப்பப்பட்ட பெரிய ஃபைல்கள் மற்றும் மீடியா இரண்டையும் தனிமைப்படுத்துவதன் மூலமும், ஃபைல்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துவதன் மூலமும், தேவையில்லாதவற்றை நீக்குவதற்கு முன்பு ஃபைல்களை முன்னோட்டமிட ஒரு வழியை வழங்குவதன் மூலமும் பயனர்களைச் சுத்தம் செய்யச் சேமிப்பக கருவி அனுமதிக்கிறது. மேலும், ஃபைல்களை நீக்குவதற்கு முன்பு மீடியாவின் மாதிரிக்காட்சியைக் காணப் பயனர்களை அனுமதிக்கும்.
அனைத்து புதிய மறுவடிவமைப்பு சேமிப்பக கருவியும் இந்த வாரம் முதல் உலகளவில் பயனர்களுக்கு வழங்கத் தொடங்கும். எனவே நீங்கள் இந்த அம்சத்தைப் பெறவில்லை என்றால், இந்த வாரத்தின் பிற்பகுதியில் புதுப்பிப்பைப் பெறுவீர்கள்.
புதுப்பிப்பைப் பெறப் பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் செல்லவேண்டும். புதுப்பிப்பதற்கு முன் தொலைபேசியை நிலையான வைஃபை இணைப்புடன் இணைந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
புதிய சேமிப்பக கருவியைப் பயன்படுத்தப் பயனர்கள் முதலில் வாட்ஸ்அப் பயன்பாட்டைப் புதுப்பித்து, பின்னர் அமைப்புகள்> சேமிப்பிடம் மற்றும் தரவு> சேமிப்பிடத்தை நிர்வகி ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"