Advertisment

மெசேஜ்களுக்கு 7 நாள்தான் கெடு: வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட் பார்த்தீர்களா?

WhatsApp Tamil News: மறைந்துபோகும் செய்திகளை பேக் அப்பிலிருந்து மீட்டெடுக்க நீங்கள் விரும்பினால், அவை நீக்கப்படும் என்பதால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது.

author-image
WebDesk
New Update
Disappearing messages feature in whatsapp facebook new update tamil news

Disappearing messages feature in whatsapp

WhatsApp Tamil News, 'Disappearing Messages' features: வாட்ஸ்அப் விரைவில் “மறைந்துபோகும் செய்திகள்” அம்சத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், வரவிருக்கும் புதுப்பிப்புகளில் இந்த அம்சத்தையும் வெளியிடும் என Wabetainfo கூறுகிறது. வெளியீட்டிற்கு முன்னதாகவே, "மறைந்துபோகும் செய்திகள்" பற்றிய கூடுதல் விவரங்களை Wabetainfo வெளிப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த அம்சத்தை இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisment

இருப்பினும், நேரத்தை கஸ்ட்டமைஸ் செய்வதற்கான விருப்பம் இதில் இருக்காது. அதாவது, “மறைந்துபோகும் செய்திகள்” ஆப்ஷனை இயக்கியதும், புதிய செய்திகள் அனைத்தும் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே அழிந்துவிடும். அவை எப்போது அழியவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதற்கான நேரத்தை உங்களால் அமைக்க முடியாது. 7 நாட்களுக்குச் செய்தியைத் திறக்கவில்லை என்றால், அவை அழிந்துவிடும். ஆனால், நோட்டிஃபிகேஷன் பேனலை அழிக்காமல் இருந்தால், அங்குள்ள செய்திகளைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

“நீங்கள் ஒரு செய்திக்குப் பதிலளிக்கும்போது, ஆரம்ப செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். அப்போது மறைந்துபோகும் செய்திக்கு நீங்கள் பதிலளித்தால், மேற்கோள் காட்டப்பட்ட செய்தி ஏழு நாட்களுக்குப் பிறகும் சாட்டில் இருக்கும். மறைந்துபோகும் செய்தி, அவை அணைக்கப்பட்ட செய்திகளின் சாட் பாக்ஸுக்கு அனுப்பப்பட்டால், அந்தச் செய்தி மறைந்துவிடாது ”என்று Wabetainfo தெரிவித்துள்ளது.

உங்கள் குறுஞ்செய்திகள் மறைவதற்கு முன்பு 'பேக் அப் (Back up)' செய்துகொண்டால், அவற்றை கூகுள் ட்ரைவில் காண முடியும். இருப்பினும், மறைந்துபோகும் செய்திகளை பேக் அப்பிலிருந்து மீட்டெடுக்க நீங்கள் விரும்பினால், அவை நீக்கப்படும் என்பதால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், மறைந்து போகும் செய்திகளை ஸ்கிரீன் ஷாட் எடுக்க வாட்ஸ்அப் பயனர்களை அனுமதிக்கிறது. மேலும், மறைந்துபோகும் படங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் கேமரா ரோலில் சேமிக்கவும் அனுமதிக்கப்படுவீர்கள். இதற்காக, 'Save to Camera Roll' என்ற ஆப்ஷனை கைமுறையாக இயக்க வேண்டும்.

“மேற்கோள் காட்டப்பட்டும் மறைந்துபோகும் செய்திகள் 7 நாட்களுக்குப் பிறகு வாட்ஸ்அப்பில் காணாமல் போகக்கூடும். காணாமல் போகும் செய்தியைப் பெறும்போது, தொடர்புத் தகவலில் (Contact Info) உள்ள விருப்பத்தை முடக்கி, செய்தியை மேற்கோள் காட்டும்போது இது நிகழ்கிறது” என Wabetainfo குறிப்பிடுகிறது. இந்த மறைந்துபோகும் செய்திகள் அம்சம் iOS, ஆண்டிராய்டு, KaiOS மற்றும் வெப் / டெஸ்க்டாப் பயனர்களுக்குக் கிடைக்கும். இது இயல்பாகவே இயக்கப்படாது, அதைப் பயன்படுத்த, நீங்கள் கைமுறையாக இயக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment