WhatsApp Download, WhatsApp Beta Version, WhatsApp Beta Version Download, வாட்ஸ் ஆப், வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷன்
WhatsApp Tamil News: வீடியோ காலிங் (Video calling) புதிதல்ல. ஆனால் அதன் உண்மையான முக்கியத்துவம் இப்பொழுது தான் முழுமையாக புரிகிறது. உலகளாவிய தொற்றான கோவிட்-19 பரவலை தடுப்பதற்கு உதவுவதற்காக அதிகப்படியான மக்களை கட்டாயம் வீட்டில் இருக்க சொல்லிய பிறகு, வீடியோ காலிங் மட்டும்தான் அவர்களோடு இணைந்திருப்பதற்கான ஒரே வழி. நீங்கள் அவர்களோடு குறுஞ்செய்தி மூலமாகவும், தொலைபேசி அழைப்பு மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் தான். ஆனால் அவர்களை பார்க்கவும் முடியும் என்பது உண்மையிலேயே விலைமதிக்க முடியாத விஷயம்தான்.
Advertisment
வாட்ஸ் ஆப்பின் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS க்கான புதிய public beta இப்போது ஒரே நேரத்தில் 8 நபர்களுடன் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களை செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது வழக்கமான எண்ணிக்கையை விட இரட்டிப்பாகும். வாட்ஸ் ஆப்பில் 8 நபர்களுடன் எவ்வாறு வீடியோ அரட்டை (video chat) செய்வது என இப்போது பார்ப்போம்.
WhatsApp Beta Version Download: வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷன்
Advertisment
Advertisements
கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் இந்த அம்சம் அனைவருக்கும் இப்போது வெளியாகவில்லை. சமீபத்திய beta பதிப்பு வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் இது இப்போது கிடைக்கிறது. ஆண்ட்ராய்டில் version 2.20.133 மற்றும் iOS ல் version 2.20.50.25.
உங்களுடைய வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டில் பதிப்பு 2.20.133 அல்லது iOS ல் பதிப்பு 2.20.50.25 இயங்கினால்தான் உங்களால் 8 நபர்களுடன் வீடியோ கால் செய்ய முடியும். அதே போல் உங்களுடன் வீடியோ காலில் பங்கேற்க உள்ள உறுப்பினர்களுக்கும் இதே போன்ற வாட்ஸ் ஆப்பின் beta பதிப்பு அவர்களுடைய கைபேசியிலும் இருந்தால் தான் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும்.
இந்த புதுப்பிப்பு அனைத்து பயனர்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அப்போது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அனைவரும் இதை பயன்படுத்தலாம்.
உங்கள் கைபேசியில் வாட்ஸ் ஆப்பின் சமீபத்திய beta பதிப்பு இருக்குமானால் நீங்கள் வீடியோ காலை இரண்டு வழிகளில் செய்யலாம். Calls tab சென்று பங்கேற்பாளர்களை manual ஆக தேர்ந்தெடுக்கலாம் அல்லது 8 பேர் கொண்ட ஒரு குழுவை (group) ஏற்படுத்தி call button ஐ அழுத்துவதன் மூலம் உடனடியாக வீடியோ அல்லது வாய்ஸ் கால்களை தொடங்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"