WhatsApp Download, WhatsApp Download Tamil News, WhatsApp Business, WhatsApp Business Download, வாட்ஸ் ஆப், வாட்ஸ் ஆப் டவுன்லோடு
WhatsApp Tamil News: கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையாதே என்பார்கள். இந்த சுலப வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்திப் பாருங்கள்! மிக பிரபலமான செய்தியிடல் (messaging) ஆப் ஆன வாட்ஸ்அப்பிற்கு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல பில்லியன் உயிர்ப்புள்ள பயனர்கள் உள்ளனர். மிகவும் பிரபலமான செய்தியிடல் தளமாக இருப்பதால், சிறு வணிகங்கள் வளர ஏராளமான வாய்ப்புகளையும் வாட்ஸ்அப் வழங்குகிறது. அங்கு தான் வாட்ஸ்அப் வணிகம் (WhatsApp Business) வருகிறது. வணிகம் மற்றும் நுகர்வோரை இணைக்க வாட்ஸ் அப்பில் ஒரு தனி பதிப்பை கொண்டிருப்பது தான் ’வாட்ஸ் அப் வணிக’ த்துக்கான முழு திட்டம். சிறு வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தொடர்புபடுத்திக் கொள்ளவும் அவர்களது ஆர்டர்களை நிர்வகிக்கும் விதத்தில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
பரந்த அளவில் ’வாட்ஸ்அப் வணிகம்’ சிறு வணிக முதலாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் வணிக சுயவிவரத்தை நீங்கள் உருவாக்கலாம், மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரி போன்ற முக்கிய தகவல்களையும் பகிரலாம். ’வாட்ஸ்அப் வணிகம்’ மூலமாக நீங்கள் உங்கள் தயாரிப்புகளை காண்பிப்பதற்காக ஒரு catalog ஐ தயாரிக்கலாம். நீங்கள் கப் கேக் (cup cake) வணிகம் செய்பவராக இருந்தால், புதிய வகை கப் கேக்குகள் குறித்த புதுப்பிப்புகளை (updates) அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பலாம். அவர்களுடைய சந்தேகங்களுக்கு ’வாட்ஸ்அப் வணிகம்’ மூலம் பதிலளிக்கலாம். கூடுதலாக, விரைவான பதில்கள், வாழ்த்து செய்திகள் மூலம் நீங்கள் வாடிக்கையாளர்களுடன் மிக எளிதாக உறவாடலாம்.
வாட்ஸ் அப் மற்றும் ’வாட்ஸ்அப் வணிகம்’ ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசங்கள் என்னென்ன
Advertisment
Advertisements
வாட்ஸ் அப் மற்றும் ’வாட்ஸ்அப் வணிகம்’ ஆகியவை இரண்டும் தனித்தனியான ஆப்கள். இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டு ஆப்களும் இயற்கையில் வேறுபட்டவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு செய்தியிடல் அப் தான் வாட்ஸ் அப். ஆனால் ’வாட்ஸ்அப் வணிகம்’ என்பது உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளம். இரண்டாவது ஆப், வாட்ஸ்அப் பை பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் பிராண்டை வளர்ப்பதற்கு பயன்படும்.
WhatsApp Business ல் எவ்வாறு ஒரு கணக்கை ஏற்படுத்துவது?
ஆப்பை பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்
OTP மூலமாக உங்கள் கைபேசி எண்ணை சரிப்பார்த்துக் கொள்ளவும்.
வணிகத்தின் பெயர் மற்றும் வகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
நீங்கள் WhatsApp Business Account ல் தயாராகிவிட்டீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil