Whatsapp Tamil News: நம்மில் பலபேருக்கு வாட்ஸ் ஆப் என்பது ஒரு முக்கியமான குறுஞ்செய்தி ஆப். இதில் இப்போது ஒரு பழைய scam திரும்பவும் வந்துள்ளது.
WhatsApp கணக்கை துவங்குவதற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP pin) தேவை. 2018 முதல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு scam இப்படிதான் வேலை செய்கிறது. வாட்ஸ் ஆப் அல்லது Facebook மூலமாக யாரோ ஒருவர் ஒரு குருஞ்செய்தியை அனுப்புவார். அதில் ஒரு OTP தவறுதலாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இருக்கும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த OTP தங்களுடைய கணக்கில் உள்நுழைவதற்கானது என சொல்லி அவர்கள் நம்மிடம் அந்த 6 இலக்க குறியீடை forward செய்ய சொல்வார்கள். இதை நம்பி நாம் அதை forward செய்துவிட்டால் நமது வாட்ஸ் ஆப் கணக்கை அந்த cybercriminals கள் களவாடிவிடுவார்கள்.
How To Avoid Whatsapp Hacking: எப்படி உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை பாதுகாப்பது?
Enable two-step verification: இந்த வசதி iOS மற்றும் ஆண்ட்ராய்ட் கைபேசி பயனர்களுக்கு பலகாலமாக கிடைக்கிறது. இந்த two-step verification அம்சத்தை இயக்க முதலில் Setting menu வுக்கு செல்ல வேண்டும். அடுத்து Account > Two step-verification > click on enable என்பதை சொடுக்கவும். அடுத்து நீங்கள் ஒரு PIN ஐ அமைக்க வேண்டும் அது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதை enable செய்த பிறகு நீங்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் WhatsApp கணக்குக்கு உள் நுழையவேண்டும் என்றால் இந்த PIN ஐ கொடுக்க வேண்டும்.
Block suspicious contact:
நீங்கள் உங்கள் கைபேசியில் பதிந்து வைக்காத ஏதாவது சந்தேகப்படும்படியான எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தால் அதை புறக்கணித்து விட்டு அந்த எண்ணை உடனடியாக block செய்துவிடவும்.
Change privacy setting:
வாட்ஸ் ஆப்பின் privacy setting ஐ மாற்ற Settings menu > click on Privacy option > Change profile photo option to My contacts > Change About to My Contacts > Change Groups to My Contacts > Change Status to My Contacts. இதன் மூலம் உங்கள் கைபேசியில் பதிந்து வைக்காத எண்களுக்கு உங்கள் விவரங்களை பார்க்க முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.