வாட்ஸ் ஆப் புது அப்டேட்: இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க..?

Whatsapp Latest Update: அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மல்டிபிள் டிவைஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக WABetaInfo ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

By: July 26, 2020, 10:24:56 PM

Whatsapp Tamil News: வாட்ஸ்அப் நிறுவனம், சமீபத்தில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கான v2.20.196.8 பீட்டா வெர்சனை அறிமுகப்படுத்தியது. v2.20.196.8 பீட்டா வெர்சன், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மல்டிபிள் டிவைஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக WABetaInfo ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் அக்கவுண்ட், எத்தனை டிவைஸ்களுடன் இணைந்துள்ளது என்பதை ‘Linked Devices’ என்று குறியிட்டு காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம், ஒருவர் தனது வாட்ஸ்அப்பை மற்றொரு டிவைசில் ஓபன் பண்ண வேண்டுமென்றால், பழைய டிவைசில் இருந்து லாக் அவுட் செய்ய வேண்டியதில்லை. ஒரேநேரத்தில் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப் உபயோகப்படுத்தலாம். இதற்கு அவர்கள் வாட்ஸ்அப் செயலியின் வலதுஓரத்தில் உள்ள 3 புள்ளிகளை அழுத்தி இந்த புதிய சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

WhatsApp Linked Devices feature எப்போது வரும்?

‘Linked Devices’ வசதி தற்போது மேம்பாட்டு பணிகளில் உள்ளது. பீட்டா வெர்சனிற்கு மாறியபோதும் இந்த சேவையை பெற இன்னும் சில காலங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், அதன் ஸ்கிரீன்சாட்களை மட்டுமே வெளியிட்டுள்ளதாகவும், இந்த சேவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று WABetaInfo ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக வந்த அறிவிப்பின்படி, புதிய அப்டேட்டிலேயே இந்த வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பீட்டா வெர்சனில் தான் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போதைய நிலையிலேயே நாம் மல்டிபிள் டிவைஸ் பயன்படுத்த முடியுமா? – என்ன வழிமுறை

வாட்ஸ்அப் அக்கவுண்டை, குரோம், பயர்பாக்ஸ், எட்ஜ் உள்ளிட்ட பிரவுசர்களில் திறக்கவும்
பின் பிரவுசர் செட்டிங்கிற்கு சென்று, அதில் டெக்ஸ்டாப் வெர்சனை தேர்ந்தெடுக்கவும்
அதில், web.whatsapp.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்
திரையில் தெரியும் QR code ஸ்கேன் செய்வதன் மூலம், அதில் வாட்ஸ்அப் சேவையை பெறலாம்.
இந்த முறையில் மற்ற டிவைஸ்களிலும் வாட்ஸ்அப் சேவையை பெறலாம்.
வாட்ஸ்அப் செயலி நிறுவப்பட்டுள்ள போனில் எப்போதும் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே மற் டிவைஸ்களில் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp linked devices whatsapp multi device whatsapp linked devices launch date

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X