இதைத்தான் எதிர்பார்த்தோம்… வாட்ஸ் ஆப் புதிய வசதிகள் சோதனையோட்டம்

WhatsApp New Features: புதிய அம்சம் இந்த சிக்கலைத் தீர்க்கும். மேலும் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் லாகின் செய்ய அனுமதிக்கும்.

By: June 15, 2020, 9:00:47 AM

WhatsApp Tamil News: வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் புதிய அம்சங்களை வெளியிடுகிறது. உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ் ஆப் வேறு சில நல்ல புதிய அம்சங்களையும் விரைவில் அறிமுகப்படுத்த வேலை செய்து வருகிறது. வாட்ஸ் ஆப்பில் வரவிருக்கும் அனைத்து புதிய அம்சங்களையும், புதுப்பிப்புகளையும் கண்டறிந்து வெளியிடும் WABetaInfo என்ற பிளாகில் (blog), நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பல சாதன ஆதரவு (multi-device support) அம்சத்தை வாட்ஸ் ஆப் சோதனை செய்ய தொடங்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் improved search, chat clearing மற்றும் பல அம்சங்களையும் சோதனை செய்ய வாட்ஸ் ஆப் தொடங்கிவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஒரு வருடமாக வாட்ஸ் ஆப் பல சாதன ஆதரவு அம்சம் தொடர்பாக வேலை செய்து வருவதை நாம் அனைவரும் ஏற்கனவே அறிவோம். இருப்பினும் சமீபத்திய அறிக்கை இந்த அம்சம் பற்றிய புதிய விவரங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த அறிக்கை வாட்ஸ் ஆப் பல சாதன ஆதரவு அம்சத்தை சோதித்துப் பார்க்க தொடங்கிவிட்டதாக கூறுகிறது, இது அம்சம் உடனடியாக தொடங்கப்படும் என்பதைக் குறிக்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ஆகிய இரண்டுக்கும் இந்த அம்சம் சோதித்துப் பார்க்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

WhatsApp New Features- வாட்ஸ் ஆப் மல்டி டிவைஸ் சப்போர்ட்

பல சாதன ஆதரவு அம்சம், பயனர்கள் பல பணிகள் செய்வதை எளிதாக்குவதோடு ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்துக்கு மாறுவதையும் எளிதாக்குகிறது. நீங்கள் WhatsApp Webஐ பயன்படுத்தாவிட்டால், தற்போதைய நிலையில் ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை இரண்டு சாதனங்களில் ஒரே நேரத்தில் லாகின் செய்ய முடியாது. இரண்டாவதாக ஒரு சாதனத்தில் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை லாகின் செய்தால் முதல் சாதனத்திலிருந்து அது தானாக லாக் அவுட் ஆகிவிடும். வரவிருக்கும் புதிய அம்சம் இந்த சிக்கலைத் தீர்க்கும். மேலும் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் லாகின் செய்ய அனுமதிக்கும்.

ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் லாகின் செய்யும் வகையில் வாட்ஸ் ஆப் இந்த புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது உண்மையானால், ஒரே நேரத்தில் பல சாதனங்களை மதிப்பாய்வு செய்யும் தொழில்நுட்ப பத்திரிகையாளர்களுக்கும், ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்துக்கு தவறாமல் மாறுகிறவர்களுக்கும் இந்த புதிய அம்சம் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கும்.

கூடுதல் அம்சங்கள்

வாட்ஸ் ஆப் கூடுதலாக சில அம்சங்களை சோதித்து வருகிறது என அந்த அறிக்கை கூறுகிறது. தனிப்பட்ட அரட்டை (chats) மற்றும் குழுக்கள் இரண்டிலும் “தேதி” மூலம் அரட்டைகளைத் தேட பயனர்களை விரைவில் செய்தி தளம் அனுமதிக்கும் என்று அது அறிவுறுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட தேதியில் பகிரப்பட்ட அரட்டைகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர விவரங்களை பயனர்கள் தேடுவதை இந்த அம்சம் எளிதாக்கும். இந்த அம்சம் தற்போது iOS பயனர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டு வருகிறது ஆனால் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் விரைவில் வரும் என கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp tamil news whatsapp multi device support whatsapp new features

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X