Whatsapp Tamil news, Whatsapp Payment Steps: இந்தியாவில் வாட்ஸ்அப் பேமென்ட்டுகள் அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்குக் கிடைக்கப்போகிறது. ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் செயலி ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டில் அதன் கட்டண சேவையைச் சோதித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டணம் செலுத்தும் அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், இந்த சேவை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்றும் தேசிய கட்டணக் கழகம் (என்.பி.சி.ஐ) வாட்ஸ்அப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ள நிலையில், இந்த கட்டண சேவை 20 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள மூன்றாம் தரப்பு யுபிஐ செயலிகளின் விதிமுறைகளுக்கு இணங்க, இரண்டு ஆண்டுகளுக்கு இது கிடைக்கும். பயன்பாட்டில் உங்களுக்கு வாட்ஸ்அப் பேமென்ட் விருப்பம் இருந்தால், உங்கள் கணக்கை எவ்வாறு அமைக்கலாம், பணத்தை அனுப்பலாம் அல்லது பெறலாம் என்பதை இனி பார்க்கலாம். உங்கள் செயலி சமீபத்திய ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்பிற்கு புதுப்பிப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
Whatsapp Payment: உங்கள் கணக்கை எவ்வாறு அமைப்பது
ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் வாட்ஸ்அப் பயன்பாட்டைத் திறந்து, திரையின் மேல் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானைத் க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: பேமென்ட் ஆப்ஷனை க்ளிக் செய்து > கட்டண முறையைச் சேர்க்கவும். இங்கு வங்கி பெயர்களின் பட்டியலைப் பெறுவீர்கள்.
ஸ்டெப் 3: வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுத்த பிறகு, வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களுடைய எண் சரிபார்க்கப்படும். இதற்காக, நீங்கள் எஸ்எம்எஸ் வழியாகச் சரிபார்ப்பை க்ளிக் செய்யவேண்டும். இந்த வாட்ஸ்அப் எண், உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட எண்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 4: சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், பேமென்ட் அமைப்பை முடிக்க வேண்டும். பிற செயலிகளில் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு UPI பின் அமைப்பதைப் போன்று இங்கேயும் அமைக்கவேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியை பேமென்ட் பக்கத்தில் காண முடியும்.
Whatsapp payment setup
வாட்ஸ்அப் பே: பணத்தை அனுப்புவது அல்லது பெறுவது எப்படி
ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பில் ஓர் நபரின் சாட்டைத் திறந்து இணைப்பு ஐகானுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: பேமென்ட்டை க்ளிக் செய்து, நீங்கள் தொகையை அனுப்ப விரும்பும் தனிநபரைச் சேர்க்கவும்.
ஸ்டெப் 3: வாட்ஸ்அப் கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க, உங்கள் யுபிஐ பின்னை உள்ளிட வேண்டும். பரிவர்த்தனை முடிந்ததும், உங்களுக்கு உறுதிப்படுத்தல் செய்தி கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"