WhatsApp Tamil News: சர்வதேச அளவில், வாட்ஸ்அப் செயலி மிகப்பிரபலமான செயலியாக உள்ளது. இந்தியாவில் மட்டும், லட்சக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தி நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே தங்களது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். அனிமேடட் ஸ்டிக்கர்கள், கியூ கோட் என புதுப்புது அம்சங்களை, வாட்ஸ்அப் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் செயலில் விரைவில் அறிமுகமாக உள்ள புதிய வசதிகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
Vacation mode
வாட்ஸ்அப் பயனாளர்கள், இந்த புதிய வசதியை பெருமளவு எதிர்பார்த்து காத்துள்ளனர். தற்போது, செய்தி தளம் சாட்டிங்குகதள காப்பகப்படுத்தும் திறனை வழங்குகிறது, ஆனால் புதிய வாட்ஸ்அப் செய்தி வரும்போது, அது நமக்கு தெரிவிக்கும்.
New Wallpapers in Chats.
வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது சாட்டிங்கின் போது, வெவ்வேறுவிதமான பேக்ரவுண்ட் வால்பேப்பர்களை மாற்றிக்கொள்ள புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக, WABetaInfo இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி தற்போது உருவாக்கத்திலேயே உள்ளது. பீட்டா வெர்சனிலும் இந்த சேவை இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் வெர்சன்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Storage Usage redesign
ஸ்டோரோஜ் யூசேஜ் பகுதியை மாற்றியமைக்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக WABetaInfo இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், ஸ்டோரேஜை எளிதில் ஆர்கனைஸ் செய்வது மட்டுமல்லாமல், தேவையற்ற பைல்களை எளிதாக அழிக்கவும் முடியும். மீடியா பைல்கள் எவ்வளவு இடத்தை அடைத்துக்கொண்டுள்ளது என்பதை எளிதாக இதன்மூலம் அறிய முடியும். பெரிய பைல்களை, அதன் ரிவியு மட்டுமே பார்த்துவிட்டு அழிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
New ringtone for group calls
வாட்ஸ்அப் குரூப் கால்கள் வசதியை பயன்படுத்துவோருக்கு இந்த புதிய வசதி வரப்பிரசாதமாக அமையும்.
New sticker animation
வாட்ஸ்அப், புதிய அனிமேசன் ஸ்டிக்கர்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், அதில் மேலும் புதுவித ஸ்டிக்கர் இணைக்கப்பட்டுள்ளன.
UI improvements for calls
குரல் அழைப்புகளுக்காக புதிய யுசர் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Whatsapp whatsapp upcoming features whatsapp new feature whatsapp features