வாட்ஸ் ஆப் புதிய அம்சங்கள் : விடியோ காலிங் முதல் forwarded messages வரை

WhatsApp New Features: இப்போது இரண்டு வெவ்வேறு கைபேசிகளில் ஒரே வாட்ஸ் ஆப் கணக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் புதிய வசதி...

By: April 20, 2020, 8:20:24 PM

WhatsApp Tamil News: ஏறத்தாழ உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வாட்ஸ் ஆப்பின் செயல்பாடு கடந்த சில வாரங்களாக பன்மடங்கு அதிகரித்துள்ளது. தேவை காரணமாக ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பூர்த்தி செய்வதற்காகவும் மற்றும் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தின் காரணமாகவும் பயனர்கள் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்க்காக வாட்ஸ் அப் நிறுவனம் முயற்சித்து வருகிறது. வாட்ஸ் ஆப் beta version ல் நிறுவனம் புகுத்தியுள்ள பல புதிய அம்சங்கள் மற்றும் அதிலுள்ள சில அம்சங்கள் stable version லும் வந்துள்ளது அதுகுறித்து பார்ப்போம்.


WhatsApp Group Calling

வாட்ஸ் ஆப் beta version ல் வந்துள்ள புதுப்பிப்புகளின் பட்டியலில் இது சமீபத்தியது. வாட்ஸ் ஆப் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது, இதில் video மற்றும் audio conference ல் பயனர் நான்குக்கு அதிகமான பேரை பங்கேற்பாளர்களாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த அம்சம் beta version ல் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் மிகவும் பாதுகாப்பான ஒரு video conferencing app ன் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த ஆப் அதை விரைவில் அறிமுகப்படுத்தும்.

Restricting forwarded messages

Forwarded messages என்பது வாட்ஸ் ஆப் பயனர்கள் தளத்தில் ஒருங்கினைந்த பகுதியாகும், ஆனால் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை (fake news) பரப்புவதற்கும் Forwarded messages ஒரு கருவியாக பயன்படுகிறது. இந்த பரவலை தடுப்பதற்காக நிறுவனம் பல்வேறு முறைகளை வகுத்துள்ளது அதில் ஒன்று forward ஐ அனுப்பக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது. ஒரு குறுஞ்செய்தியை ஐந்து முறைக்கு மேல் அனுப்பியிருந்தால், பயனரால் அதை ஒன்றுக்கு மேற்பட்ட பெறுனர்களுக்கு அனுப்ப முடியாது. இது போலி செய்திகளின் பரவல் வேகத்தை சற்றுக் குறைக்கும்.

Forwarded messages களை சரிப்பார்ப்பது (Verification of forwarded messages)

போலி செய்திகளின் பரவலுக்கு எதிராக வாட்ஸ் ஆப்பால் சோதிக்கப்படும் இன்னொறு கருவி. அப்ளிக்கேஷனிலேயே forwards களை எளிதாக சரிப்பார்க்க ஒரு முறையை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது. அடிக்கடி பகிறப்படும் வாட்ஸ் ஆப் forwards களுக்கு அருகில் ஒரு தேடல் சின்னத்தை beta சோதனையில் இந்த ஆப் காண்பிக்கிறது. இதை சொடுக்கும் போது அந்த சின்னம் பயனரை ஒரு சரிப்பார்க்கும் பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். அங்கு பயனர் அந்த செய்தியின் நம்பகத்தன்மையை சோதித்து பார்த்துக் கொள்ளலாம்.

Search for Photos, GIFs:

வாட்ஸ் ஆப் பயனர்கள் குறிப்பிட்ட சொற்களை (keywords) ஆப்பில் தேடலாம், ஆனால் பயனர்களால் media வை ஒரு அரட்டையின் (chats) உள்ளே தேட முடியாது. சோதிக்கப்படும் புதிய பதிப்பில் Media files களான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் documents களை பயனர்கள் ஆப்பில் தேட முடியும். சொற்களை (keywords) உள்ளீடு செய்வதற்கு முன்பு எந்தவகையான media அல்லது document என்பதை பயனர்கள் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.

video call செய்வதை எளிதாக்குவது

video call செய்வதற்கான வழிமுறையில் ஒரு மாற்றத்தை வாட்ஸ் ஆப் கொண்டுவந்துள்ளது. நான்கு அல்லது அதற்கு குறைவான உறுப்பினர்களை கொண்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் video call செய்வதற்கு மேல் வலது மூலையில் உள்ள video call பொத்தானை சொடுக்கினால் போதும்.

ஒரே எண்ணை பல கைபேசிகளில் பயன்படுத்துவது (Using same number in multiple phones)

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆப்பை ஒரே ஒரு கைபேசி எண்ணிலிருந்து மட்டும் தான் அணுக முடியும். ஆனால் இப்போது இரண்டு வெவ்வேறு கைபேசிகளில் ஒரே வாட்ஸ் ஆப் கணக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் வாட்ஸ் ஆப் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp tamil news whatsapp video call whats app group calling whatsapp new features

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X