மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஏ.ஐ-ல் இயங்கும் இமெஜ் எடிட்டர் வசதியை நிறுவனம் சோதனை செய்து வருவதாக தெரிகிறது.
ஏ.ஐ இமெஜ் எடிட்டர்
வாட்ஸ்அப்-ல் பயனர்கள் இமெஜ் ஓபன் செய்யும் போது பச்சை நிறத்தில் புதிய ஐகான் இருக்கும். இந்த ஏ.ஐ எடிட் ஆப்ஷன் உங்களின் background படம் மாற்றம் மற்றும் restyle செய்ய அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதை செய்ய ஏ.ஐ கருவிக்கு எந்த வகையான ப்ராம்ட் பயன்படுத்தப்படும் என்பதும் தற்போது தெரியவில்லை.
WeBetaInfo தகவல் படி., இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.24.7.13-ல் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இதன் மூலம் அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வாட்ஸ்அப் முன்னதாக, இதே போன்று ஏ.ஐ மூலம் டெக்ஸ்டில் இருந்து இமேஜ், ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சத்தை சோதனை செய்தாக கூறப்பட்டது. ஆனால் அது மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. பீட்டா வெர்ஷனில் இருந்தும் நிறுவனம் அதை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“