/indian-express-tamil/media/media_files/2025/10/23/linking-facebook-and-whatsapp-profiles-2025-10-23-21-49-32.jpg)
வாட்ஸ்அப் புரொஃபைலில் ஃபேஸ்புக் லிங்க்: மெட்டாவின் அடுத்த பெரிய அப்டேட்! புதிய வசதி என்ன?
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் புரொஃபைலை ஃபேஸ்புக் புரொஃபைலுடன் நேரடியாக இணைக்கும் புதிய அம்சத்தை தற்போது சோதனை செய்து வருகிறது. இது, வாட்ஸ்அப் பயனர்களுக்கு சோசியல் மீடியா இணைப்பை மேலும் எளிதாக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா 2.25.29.16 வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிளின் TestFlight ஆஃப் மூலம் iOS பீட்டா பயனர்களுக்கும் இது வழங்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டா இணைப்பைப் போலவே, பிற சமூக ஊடக தளங்களை வாட்ஸ்அப்புடன் இணைப்பதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் லிங்க் எப்படிச் செயல்படும்?
இந்த அம்சத்தின் மூலம், வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் புரொஃபைல் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குச் சென்று, தங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட் லிங்கை நேரடியாக சேர்க்க முடியும். லிங்க் சேர்த்த பிறகு, அது வாட்ஸ்அப் புரொஃபைலின் "தொடர்பு விவரங்கள்" (Contact Details) பிரிவில் காட்டப்படும். பயனர்கள் ஒரேயொரு கிளிக் மூலம் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை மற்றவர்கள் அணுக அனுமதிக்கலாம்.
கட்டுப்பாட்டு உரிமைகள்:
பயனர்கள் தங்கள் ஃபேஸ்புக் புரொஃபைல் URL-ஐச் சேர்த்த பிறகு, தனியுரிமைக் கட்டுப்பாட்டைப் (Privacy Control) பயன்படுத்தி, அந்த லிங்கை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை முடிவு செய்யலாம். லிங்கை அனைவரும் பார்க்கலாமா? தொடர்புகள் (Contacts) மட்டும் பார்க்கலாமா? அல்லது முழுவதும் மறைக்கப்பட வேண்டுமா? என்பதை வாட்ஸ்அப் பயனர்கள் தாங்களாகவே தேர்வு செய்யலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாமல் இருப்பதும் முற்றிலும் பயனர்களின் விருப்பம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெரிஃபைடு லிங்க் வசதி:
பயனர்கள் தங்கள் ஃபேஸ்புக் லிங்கை வெரிஃபை செய்யாமல் அப்படியே வைத்திருக்கலாம், அல்லது மெட்டாவின் அக்கவுன்ட்ஸ் சென்டர் (Accounts Center) மூலமாக அதனை வெரிஃபை செய்யலாம். வெரிஃபை செய்யப்படும்போது, 2 அக்கவுன்டுகளும் ஒரே நபருக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்படும். வெரிஃபை செய்யப்படாத லிங்குகளில் URL மட்டுமே காட்டப்படும். இந்த அம்சம் தற்போது பீட்டா சோதனையில் மட்டுமே உள்ளது. விரைவில் இது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us