மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆர்ச்சிவ் வசதியை அறிமுகம் செய்கிறது.
அதன்படி பயனர்கள் ஸ்டேட்டஸை 30 நாட்கள் வரை சேமித்து வைக்க (ஆர்ச்சிவ்) அனுமதிக்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் பிசினஸ் அக்கவுண்ட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் பிசினஸ் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.23.11.18 என்று சோதனை அடிப்படையில் பீட்டா அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பிசினஸ் அக்கவுண்ட் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பில் ‘ஸ்டேட்டஸ்’ என்ற டேப்-க்கு கீழ் வழங்கப்படுகிறது. சேமித்து வைக்கப்பட்ட தகவல்களை பயனர் மட்டுமே பார்க்க முடியும்.
பிசினஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் தகவல்களைப் பகிர எளிதாக இருக்கும். பயனர்கள் இதற்கிடையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களை உருவாக்க முடியும். இந்த அம்சம் வரும்நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil