மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்திற்கு (DMA) இணங்க 3-ம் தரப்பு மெசேஜிங் தளத்தை ஒருங்கிணைக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
வாட்ஸ்அப் இயங்குதளமானது இரண்டு ஆண்டுகளாகச் செயல்பாட்டைச் சோதித்து வருகிறது, இது பயனர்கள் மற்ற தளங்களில் உள்ளவர்களுடன் செய்திகள், வீடியோக்கள், படங்கள் மற்றும் கோப்புகளைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
பிற தளத்தின் பயன்பாடுகளிலிருந்து செய்திகளை அனுப்பும் மற்றும் பெறும் திறன் சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஒரு சில பயனர்களுக்கு விரும்பமில்லாமல் இருக்கும். கிராஸ்-பிளாட்ஃபார்ம் செய்தியிடலை முடக்க பயனர் தேர்வுசெய்தால், அவர்களால் மற்ற தளங்களில் இருந்து செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாது.
எனினும் இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“