நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்

நமக்கு தெரியாத ஐந்து டிப்ஸ் பற்றிய தகவல்கள் இதோ!

WhatsApp tricks and tips : இந்த உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி எது என்று கேட்டால் அது வாட்ஸ்அப் தான். உலகில் ஒரு பில்லியன் மக்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆப்பினை இந்தியாவில் மட்டும் சுமார் 250 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒருவர் தனிப்பட்ட ரிங்டோனை மெசேஜ்களுக்கென வைத்துக் கொள்ளலாம். உங்களின் டேட்டாவினை குறைவாக பயன்படுத்தி வீடியோ கால் பேசலாம். இதில் நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரிக்குள் இவை தான்.

உங்கள் குழுவில் நீங்கள் அனுப்பிய செய்தியினை யாரெல்லாம் படித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள

நீங்கள் இருக்கும் க்ரூப் ஒன்றில் நீங்கள் அனுப்பிய செய்தியினை லாங் பிரஸ் செய்தால், செயலியின் மேலே மூன்று புள்ளிகளுடன் கூடிய ஆப்சன் தோன்றும். அதை க்ளிக் செய்தால் அதில் இன்ஃபோ என்ற மற்றொரு ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் உங்களின் செய்தி யாருக்கெல்லாம் சென்றிருக்கிறது. அதை யாரெல்லாம் படித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிங் டோன் (WhatsApp tricks and tips)

ஒவ்வொரு நண்பர்களின் குறுஞ்செய்திக்கும் ஒவ்வொரு ரிங் டோன்
நோட்டிபிகேஷன் பார்க்காமலே யார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள இது மிகவும் ஏற்ற ஒரு டிப்ஸ் ஆகும். வியூ கான்டாக்ட் சென்று அதில் கஸ்டம் நோட்டிஃபிகேஷனை தேர்வு செய்யவும். அதில் உங்களுக்கு பிடித்தமான ரிங்க் டோனினை உங்களின் நண்பர்களுக்காக வைத்துக் கொள்ளலாம்.

ஸ்டார் மேசேஜ் (WhatsApp tricks and tips)

உங்களுக்கு வரும் மேசேஜ்களில் முக்கியமானதை நீங்கள் ஸ்டார் செய்து கொள்ளலாம். பின்பு உங்களுக்கு தேவைப்படும் போது ஸ்டார் மெசேஜ்களை வரிசையாக பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு வந்த மெசேஜ்ஜினை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் ஆப்சன் தோன்றும். அதனை டிக் செய்தால் அது ஸ்டார் செய்யப்பட்டுவிடும்.

To read this article in English 

மொபைல் டேட்டா

வாட்ஸ் ஆப் காலில் எப்படி மொபைல் டேட்டாவினை குறைவாக செலவிடுவது?
செட்டிங்ஸ் பகுதியினை தேர்வு செய்தால் அதில் டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் யூசேஜ் டேப் வரும். அதில் வாட்ஸ்அப் காலிற்கான டேட்டா குறித்த தகவல்கள் கீழே இருக்கும். அதை டிக் செய்தால் வாட்ஸ்ஆப் காலின் போது மொபைல் டேட்டா குறைவாக செலவாகும்.

சர்ச் ஆப்சன்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட மெசேஜ்ஜினை உங்கள் சாட்டில் தேடுகிறீர்கள் என்றால், அந்த சாட்டினை முதலில் ஓப்பன் செய்து கொள்ளுங்கள். மேலே தெரியும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தால் ஒரு பாப்அப் உருவாகும். அதில் சர்ச் என்ற ஆப்சன் தோன்றும். அதை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான மெசேஜ்ஜினை தேடி எடுத்துக் கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close